ஹீரோயின்களுடன் டூயட் பாட ஆசைப்படும் காமெடி நடிகர்... தெறித்து ஓடும் பெரிய பிரபல நடிகைகள்!
சென்னை: ஹீரோவாகியுள்ள காமெடி நடிகர் ஒருவருக்கு ஹீரோயின்களுடன் டூயட் பாட வேண்டும் என ஆசை வந்துள்ளது.
தமிழ் சினிமாவில் துணை நடிகராக அறிமுகமாகி, பின்னர் காமெடியனாக வளர்ந்தவர் இவர். இப்போது கை நிறைய படங்களுடன், கதாநாயகனாகவும் நடித்து வருகிறார்.

ஆரம்பத்தில் எனக்கு இதெல்லாம் சரிபட்டு வராது என கூறிவந்த நடிகருக்கும், தற்போது டூயட் பாடும் ஆசை வந்துவிட்டதாம். இதனால் தன்னை தேடி வரும் புதிய இயக்குனர்களிடம், படத்தில் தனக்கு ஒரு ஜோடி வேண்டும், டூயட் வேண்டும் என பல்வேறு நிபந்தனைகளை முன்வைக்கிறாராம்.
நடிகர் என்ன செய்தாலும் மக்கள் ரசிப்பார்கள் என்பதால் சம்மந்தப்பட்ட இயக்குனர்களும் இதற்கு ஓகே சொல்லிவிட்டனராம். இதனால் விரைவில் நடிகரின் டூயட் பாடல்களை ரசிக்கலாம் என்கின்றனர்.
ஆனால் பெரிய நடிகைகள் யாரும் அவருடன் டூயட் பாட முன்வருவார்களா என்பது சந்தேகமே. இதனால் புதுமுக நடிகைகளை தேடும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இதற்கு முன்னர் இவரை போலவே பல கண்டிசன்களை போட்ட காமெடி நடிகர்கள், தற்போது மார்க்கெட் இல்லாமல் ஈ ஓட்டிக்கொண்டிருக்கின்றனர். அவர்களை பார்த்தும் கூட நடிகருக்கு இந்த ஆசை தேவைதானா என்கின்றனர் அவரது நலம் விரும்பிகள்.
ஆனால் அதை எல்லாம் காதில் போட்டுக்கொள்ளாமல், காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ள வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார் நடிகர்.


Click it and Unblock the Notifications











