வம்பு (இமய)மலையேறிய கதை!
கொஞ்ச நாட்களாக வம்பு நடிகரின் ஆன்மீக புராணம்தான் இணையதளங்களிலும் பத்திரிகைகளிலும் பெரிதாக வந்து கொண்டிருக்கிறது.
நடிகருக்கு உண்மையிலேயே பக்தி பொங்கி வழிகிறதா... அல்லது இதுவும் அவரது லீலைகளில் ஒன்றா என்று கிளறினால்... இது பக்தி லீலையேதானாம்.
திருமண விஷயத்தில் வீட்டில் பெற்றோருடன் அவருக்கு பெரும் பிரச்சினையாம். அவர்களுக்கு ஒரு ஷாக் ட்ரீட்மென்ட் தர விரும்பிய வம்பு மூளையில் உதித்ததுதான் இந்த பக்தி விவகாரம். அந்த நேரம் பார்த்து ஒரு படப்பிடிப்பு இமயமலையில் நடந்ததால், அப்படியே காவி கட்டி தெருவோரத்தில் உட்கார்ந்தபடி ஒரு போஸும் கொடுத்தார்.
இன்னொரு பக்கம், அவரது இரண்டு படங்களின் தயாரிப்பாளர்களும் வழிக்கு வருவதாகத் தெரியவில்லை. அவர்களையும் கொஞ்சம் ஆட வைக்கலாம் என்பதற்காக, இனி சினிமாவில் நடிப்பதையே நிறுத்திவிடலாமா என்று யோசிக்கிறேன் என்று ஒரு டீஸர் விட்டார்.
கைமேல் பலன்... பெற்றோரும் வழிக்கு வந்துவிட்டார்கள்... தயாரிப்பாளர்களும் எங்கே வம்பு என்று தேடி வந்து ஷூட்டிங் ஆரம்பிக்கலாம் வாங்க என கூப்பிட்டிருக்கிறார்கள்.
இதெப்டி இருக்கு!


Click it and Unblock the Notifications











