இரண்டாவது திருமணத்துக்கு கெஞ்சும் உச்ச நடிகர்.. மகளின் ட்ராக்கே வேறயாம்.. பங்களாவில் பஞ்சாயத்து

By Staff

சென்னை: உச்ச நடிகரிடம் எவ்வளவுதான் பணம் கொட்டி கிடந்தாலும் நிம்மதி கம்மியாகத்தான் இருக்கிறது. தனது மகளின் வாழ்க்கையை நினைத்து ரொம்பவே மன உளைச்சலில் இருக்கிறாராம். எப்படியாவது அவரை இரண்டாவது திருமணம் செய்துகொள்ள சம்மதிக்க வைக்க வேண்டும் என்று முழு மூச்சாக இறங்கியிருக்கிறார். ஆனால் மகளோ பிடிகொடுக்காமல் நழுவிவருகிறாராம்.

ஏழேழு தலைமுறைக்கும் அமர்ந்து சாப்பிடக்கூடிய அளவு சொத்தை சேர்த்து வைத்திருக்கிறார் அந்த உச்ச நடிகர். இன்னமும் சேர்ப்பதற்காக ஓடிக்கொண்டிருக்கிறார். இப்படி பம்பரமாய் சுழன்று ஒரு சாம்ராஜ்ஜியத்தையே எழுப்பி வைத்திருந்தாலும் எதிர்பார்த்த நிம்மதி கிடைக்கவில்லை. தனது வாரிசுகளுக்கு அவர்கள் விருப்பப்பட்டதன் பேரிலேயே வாழ்க்கையை அமைத்துக்கொடுத்தார்.

சிக்கல்: அவர்களில் ஒருவர் திருமண வாழ்க்கை சரியில்லை என்று சொல்லி வெளியே வந்துவிட்டார். பதறாத நடிகர் கொஞ்சம் நேரம் கொடுத்தார். இன்னொருவரை காதலித்த மகளுக்கு அவரையே திருமணம் செய்துவைத்துவிட்டார். அது அனைவரிடமுமே பாராட்டை பெற்றது. சித்தாந்தத்தி அப்படி இப்படி இருந்தாலும் ரியாலிட்டி வாழ்க்கையில் நல்ல மனதுக்காரராகத்தான் இருக்கிறார் என்று அந்தத் திருமணம் உணர்த்தியது.

actor s daughter is determined not to get married again

அடுத்த பிரச்னை: அந்தப் பிரச்னையை முடித்து மூச்சு விட்ட நேரத்தில் இன்னொரு வாரிசுக்கும் பிரச்னை வந்தது. எப்படியாவது இதனை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிந்துவிட வேண்டும் என்றுதான் எவ்வளவோ முயன்றார். ஆனால் இரண்டு தரப்பும் விட்டுக்கொடுப்பதாக இல்லை. எதிர் தரப்பு இந்த முறை விடாப்பிடியாக விவாகரத்து வேண்டும் என்று உறுதியாக நின்றதால் பிரிவும் நிகழ்ந்துவிட்டது.

சிங்கிள்தான்: கணவரை பிரிந்த மகள் தந்தை வீட்டிலேயே செட்டில் ஆகிவிட்டார். அவரை தன்னுடன் வைத்துக்கொள்வதில் நடிகருக்கு எந்த சங்கடமும் இல்லை. இருந்தாலும் இன்னொரு திருமணம் செய்து கணவரோடு இங்கே இருந்தால் இன்னும் கொஞ்சம் பெட்டராக இருக்கும் என்று யோசிக்கிறாராம். அதன் காரணமாக எப்படி எப்படியோ யார் யாரையோ வைத்து அடுத்த திருமணத்தை பற்றி பேச்சு எடுத்திருக்கிறார் நடிகர். ஆனால் மகளோ நழுவிக்கொண்டே இருக்கிறாராம். ஒருகட்டத்தில் தனக்கு நெருக்கமானவர்களை வைத்து பங்களாவில் பஞ்சாயத்தையே நடத்தினாராம் நடிகர்.

என்ன காரணம்?: இருந்தாலும், ஒரு திருமணத்தில் பட்ட வடுவை மறக்க முடியாமல் தவிக்கும் மகள் இனி தனது வாழ்க்கையில் யாருக்கும் பங்கு கிடையாது. கடைசிவரை சிங்கிள் மதராகவே இருந்துவிடலாம் என்று முடிவு செய்துவிட்டாராம். அதுமட்டுமின்றி கரியரில் கவனம் செலுத்தி தந்தை போல் சினிமாவில் பெயர் எடுத்து அந்தப் பெருமையை அடுத்த தலைமுறையிலும் தொடர செய்ய வேண்டும். அதற்கு சிங்கிளாக இருப்பதுதான் நல்லது என ஃபிக்ஸ் செய்துவிட்டாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X