»   »  'மில்க் பியூட்டி'க்காக சம்பளத்தை குறைத்துக் கொண்ட நடிகர்கள்

'மில்க் பியூட்டி'க்காக சம்பளத்தை குறைத்துக் கொண்ட நடிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மழையில் ஆட்டம் போட்ட அந்த நடிகையின் காட்டில் தற்போது அடைமழை பெய்து வருவதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சிறுத்தை நடிகருடன் ஏற்பட்ட காதல் தோல்வியால் தமிழ் சினிமாவை விட்டு நடிகை ஒரேயடியாக ஒதுங்க, கோட் சூட் நடிகரின் வீரமான படம் அவரை மீண்டும் மீட்டு வந்தது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் நடிகை வீரம் காட்டிய அந்த ராஜவம்ச படம் நன்றாக ஓடியதில், தற்போது மீண்டும் தமிழ் சினிமாவில் முன்னேறிக் கொண்டிருக்கிறார் நடிகை.

உச்ச நடிகரின் பெயரைக் கொண்ட அந்தப் படத்தில் நடிக்கும் நடிகையின் சம்பளம் சுமார் மூஞ்சி நடிகரின் சம்பளத்தை விட 2 மடங்கு அதிகமாம்.

அதே போல மீண்டும் வெற்றிப் படம் கொடுக்கும் முனைப்பில் இருக்கும் அந்த குவாட்டர் நடிகரின் அடுத்த படத்திலும் நடிகை தான் நாயகியாம்.

சுமார் மூஞ்சி நடிகர் போல குவாட்டர் நடிகரின் படத்திலும் நடிகரை விட நடிகைக்கு தான் சம்பளம் அதிகம் என்கிறார்கள்.

இதே போல மேலும் பல நடிகர்களும் நடிகையுடன் ஜோடி போட விரும்புவதால், முன்னணி நடிகைகளுக்கு இணையாக சம்பளத்தில் உயர்ந்து வருகிறார் நடிகை.

English summary
Sources Said Compared to Co-Actors, Milk Beauty Actress get High Salary in Tamil Industry.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil