»   »  முக்கா முக்கா மூணுவாட்டி!

முக்கா முக்கா மூணுவாட்டி!

Subscribe to Oneindia Tamil

கோலிவுட்டின் சூப்பர் ஹிட் வதந்தி செய்தி இது. படு சூடான இந்த வதந்தியில் சிக்கியிருப்பவர் சமீபத்தில் மெகாஹிட் படம் கொடுத்த இம்சை நாயகன்!

பிரமாண்ட இயக்குநர், பெரிய செலவு பண்ணி எடுத்த படம்தான் அந்த இம்சை ராஜா படம். ஏகப்பட்டசிக்கலுக்குப் பின்னர் படம் வெளியாகி வசூலில் பின்னி எடுத்தது. இதன் மூலம் காமெடி ராஜாவாக திகழ்ந்து வந்தஅந்த மதுரைக்கார சிரிப்பு வள்ளல், ஹீரோவாகவும் முத்திரை பதித்து சாதித்தார்.

இந்தப் படத்தின் அபார வெற்றியால் அவரைத் தேடி ஏகப்பட்ட ஹீரோ பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.இருந்தாலும் போதை தலைக்கேறி விடாமல் படு லாவகமாக அத்தனையையும் சமாளித்து தொடர்ந்து காமெடிபண்ணி கல்லாக் கட்டி வருகிறார்.

இம்சை அரசுக்கு ஜோடியாக அப்படத்தில் இரண்டு ஹீரோயின்கள். அதில் ஒருவர் தகதக தேஜஸுடன்கூடியவர். முதல் படத்திலேயே சின்ன வீடா வரட்டுமா, பெரிய வீடா வரட்டுமா என்று கேட்டு, ரசிகர்களின்மனசுகளில் ஊடு கட்டி உல்லாசம் கூட்டியவர்.

அம்மணியுடன் நடித்தபோது அவரது தேஜஸ் நம்ம புயலை கவர்ந்து விட்டது, இன்னும் சொல்லப் போனால்கவிழ்த்து விட்டதாம். அழகில் மயங்கிய அவர் தேஜஸுடன் நல்ல நட்பை ஏற்படுத்தி கொண்டார். அத்தோடுதனது படங்களில் முக்கியமான ரோல் வாங்கித் தருவதாகவும் ஜிகிர்தண்டா கணக்கில் டேஸ்ட்டியாகபேசியுள்ளார்.

காமெடியில் இப்போது அவர்தான் ஒண்ணாம் நம்பர் என்பதால் தேஜஸும் நம்பியுள்ளார். அதைப் பயன்படுத்திக்கொண்ட ராஜாவும், 2 முறை தனது இருப்பிடத்திற்கு வரவழைத்து எதிர்காலம் குறித்து டிஸ்கஸ் செய்தராம்.டிஸ்கஸ் சிறப்பாக இருந்ததால் ராஜாவின் தேஜஸ் கூடிப் போனதாம்.

ஆனால் 2 முறை டிஸ்கஸ் செய்தும் ஒரு படத்திற்கும் தன்னைப் பரிந்துரைக்கவில்லையே காமெடி ராஜா என்றுகடுப்பாகிப் போன தேஜஸ், இனிமேல் கருப்பு சங்காத்தமே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்து விட்டாராம்.

முக்கா முக்கா மூணு வாட்டி கதையாக 3 முறையாக டிஸ்கஸ் செய்யலாமே என்று ராஜாவிடமிருந்து ஓலைசென்றதாம். தேஜஸோ, அதற்கு வெடுக்கென பதிலைக் கொடுத்து துண்டித்துக் கொண்டாராம் தொடர்பை.

வெக்ஸ் ஆகிப் போன ராஜா, தேஜஸ் இருக்கும் பக்கம் கூட திரும்பிப் பார்ப்பதில்லையாம் இப்போது. இந்தக்கதையைத்தான் கோலிவுட்யே கூடிக் கூடிப் பேசி வருகிறதாம்.

சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு!

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil