»   »  பாங்காக் பறக்கும் நடிகைகள்

பாங்காக் பறக்கும் நடிகைகள்

Subscribe to Oneindia Tamil

முக வசீகரத்தை கூட்டவும், உடல் பளபளப்பை பட்டை தீட்டிக் கொள்ளவும் கோலிவுட் நடிகைகள் பாங்காக்கிற்குபறக்கத் தொடங்கியுள்ளனர்.

தாய்லாந்து, பாங்காக் என்றாலே பலான, பலான நினைவுதான் வரும். அந்த அளவுக்கு பவுடர் மசாஜுக்கும்,சான்ட்விச் மசாஜுக்கும் பெயர் போனது பாங்காக். அந்நகரத்து பாவையரின் கை பட வேண்டும்என்பதற்காகவே பாங்காக் பறக்கத் துடிப்பார்கள் துடிப்பானவர்கள்.

இப்போது நம்ம ஊர் நடிகைகளும் பாங்காக்கிற்கு பறக்க ஆரம்பித்துள்ளனர். இதற்கு முக்கியக் காரணம்,முகத்தை பளபளப்பாக்கிக் கொள்ளத்தான். அந்நாட்டு ட்ரீட்மெண்டும் மசாஜும் முகத்தை பளீரென மின்னவைப்பதாகசில அனுபவ ஸ்திரீகள் மூலம் கேள்விப்பட்டதால் இப்போது பல நடிகைகளும் பாங்காக் போய்பளபளப்பாகி வருகிறார்கள்.

பாங்காக் பறந்து பளாரென வந்த முதல் நடிகை ஸ்னேகாதான். நாக் ரவி சிக்கலுக்கு முன்பு இருந்த ஸ்னேகாவைவிட இப்போதைய ஸ்னேகாதான் படு ஜோராக இருக்கிறார் என்பது அவரை நன்கு அறிந்தவர்களின்பாராட்டுரை.

இதைக் கேள்விப்பட்டதும் திரிஷாவும் பாங்காக் பறந்து போய் தனது முக வசீகரத்தை மெருகேற்றிக் கொண்டார்.திரும்பி வந்தபோது திரிஷாவின் அழகைப் பார்த்து அவரது அம்மாவுக்கே ஆச்சரியமாகிப் போய் விட்டதாம் (அவரும் கூட போனாலும் போகலாாமாம்).

இவர்களைத் தொடர்ந்து பிரியாமணியும் பாங்காக் போய் முக அழகையும், மேனி அழகையும் ஒரு சேர சார்ஜ்ஏற்றிக் கொண்டு வந்துள்ளாராம். முன்பை விட இப்போது படு கிளாமராக மாறியுள்ளாராம் பிரியா.

இவர்களைத் தொடர்ந்து மேலும் பல நடிகைகளும் பாங்காக் போய் அழகைக் கூட்டிக் கொள்ள பறக்கத் தயாராகிவருகிறார்களாம்.

ஆண்கள் பறந்தால் அதுக்கு, ஹீரோயின்கள் பறந்தால் இதுக்கா?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil