»   »  மாமா பிரசாத்-சிக்கலில் பிஷ் நடிகை

மாமா பிரசாத்-சிக்கலில் பிஷ் நடிகை

Subscribe to Oneindia Tamil

பிஷ் நடிகையை தொழிலதிபர் ஒருவருக்கு ஏற்பாடு செய்து கொடுத்ததாக விபச்சார புரோக்கர் கன்னட பிரசாத்போலீஸில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளதாகத் தெரிகிறது.


தமிழகம், கர்நாடகம், கேரளம், ஆந்திரம் என தென்னிந்தியா முழுவதும் நூற்றுக்கணக்கான அழகிகள்,நடிகைகள், துணை நடிகைகளை வைத்து விபச்சாரத் தொழிலை படு ஜோராக நடத்தி வந்த விபச்சார புரோக்கர்கன்னட பிரசாத் போலீஸ் பிடியில் சிக்கியுள்ளார்.

போலீஸாரிடம் அவர் பரபரப்பு வாக்குமூலத்தை அளித்துள்ளார். அதில் பல முன்னணி நடிகைகள் குறித்தும்,தனக்கும், அவர்களுக்கும் உள்ள தொழில் ரீதியிலான தொடர்புகள் குறித்தும் புட்டுப் புட்டு வைத்துள்ளாராம்பிரசாத்.

பிரசாத்தின் வாக்குமூலத்தால், இதுவரை அந்த நடிகைகளுக்குத் தெய்வமாக தெரிந்த பிரசாத் இப்போதுசாத்தானாக காட்சி அளிக்கிறாராம்.

மிகப் பிரபலமாக இருந்த பிஷ் நடிகையை, ஒரு தொழிலதிபருக்கு ஏற்பாடு செய்து கொடுத்து பெரும் பணம்பார்த்ததாக போலீஸில் பிரசாத் தெரிவித்தள்ளாராம்.

இன்னும் சில முக்கிய நடிகைகள் குறித்தும் அவர் விலாவாரியாக தெரிவித்துள்ளாராம். அதுதவிர, தமிழ்த்திரையுலக பி.ஆர்.ஓ.க்கள் பலரையும் கூட அவர் காட்டிக் கொடுத்துள்ளாராம்.

பிரசாத்தை போலீஸ் காவலில் எடுத்து, முறைப்படி விசாரித்தால் இன்னும் நிறைய கொட்டுவார் என்கிறதுபோலீஸ் வட்டாரம்.

எனவே போலீஸ் கஸ்டடிக்கு பிரசாத் வந்த பிறகுதான், பல தமிழ், தெலுங்கு, மலையாள, கன்னட நடிகைகளின்வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறும்.

இதுவரை கன்னட பிரசாத் கொடுத்துள்ள வாக்குமூலத்தில்,

எனக்கு 20 வயது இருக்கும் போது சென்னைக்கு வேலை தேடி வந்தேன். அப்போது சினிமாக பிஆர்ஓ ஒருவர் எனக்கு அறிமுகமானார். அவரதுஅறையில் தான் நான் தங்கியிருந்தேன். அவர் என்னை சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறினார். அப்போது எனக்கு முன்னணிநடிகர்களையெல்லாம் எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். சிறிய வேடங்களில் நடித்து வந்தேன்.

அது சாப்பிடுவதற்குத் தான் காசு கிடைக்கும். பின்னர் துணை நடிகைகளை சினிமாவில் நடிக்க வைக்கும் ஏஜென்டாக மாறினேன். அதில் எனக்குதினமும் ரூ. 50 தான் கிடைக்கும். அப்போது தான் துணை நடிகைகள் விபசார தொழில் செய்வது தெரிய வந்தது.

விபசாரத் தொழிலில் நல் வருமானம் கிடைப்பது தெரியவந்ததால் முதலில் துணை நடிகைகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி வைத்து சிறியஅளவில் தொழிலைத் தொடங்கினேன். அதில் நல்ல வருமானம் கிடைத்ததால் 3 மாநிலங்களில் தொழிலை விரிவுபடுத்தினேன்.

விருகம்பாக்கம் சுப்பையா என்பவர் அந்த காலத்தில் பெரிய அளவில் விபசாரத் தொழிலை செய்து வந்தார். அவர் தான் எனக்கு குரு. விபசாரத்தொழில் செய்தால் கூட நான் குடும்ப வாழ்க்கையை தனியாக அமைத்து வாழ்ந்து வந்தேன். எனது தொழில் எனது குடம்பத்தினருக்கு தெரியாது.

எனது முதல் மனைவி லதா. அவர் மூலம் திவ்யா, திபி என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர். எனக்கு ஆண் குழந்தை இல்லாததால் விமலா என்றபெங்களூரை சேர்ந்த விபச்சார பெண்ணை 2வதாக திருமணம் செய்து கொண்டேன். ஆனால் விமலா மூலம் ஆண் குழந்தை பிறக்கவில்லை.

இதனால் 3வதாக பெங்களூரை சேர்ந்த குசும் என்ற பெண் என்ஜினீயரை திருமணம் செய்து கொண்டேன். பெங்களூரில் உள்ள என்னுடைய பெரியபங்களாவில் தற்போது அவர் வசித்து வருகிறார். குஷூம் ஏற்கனவே திருமணமாவர். அவரது கணவர் பெங்களூரில் கம்ப்யூட்டர் என்ஜினீயராகஉள்ளார்.

என்னிடம் ஒரே நேரத்தில் 60ல் இருந்து 100 அழகிகள் வேலை செய்வார்கள். அவர்களை 15நாட்கள் மட்டும் வைத்திருப்பேன். 15 நாட்களும்தினமும் 3 ஷிப்ட் வேலை செய்வார்கள். அழகான பெண்களாக இருந்தால் ரூ. 10,000ம் முதல் 20,000 ரூபாய் வரை வசூல் செய்வேன். 15 நாட்கள்கழித்து அழகிகளை அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி விடுவேன். அப்போது அவர்களுக்கு ரூ. 20,000 முதல் ரூ. 50,000 வரை கொடுத்துஅனுப்புவேன்.

நான் நேரடியாக யாரிடமும் தொடர்பு வைத்துக் கொள்ள மாட்டேன். நடுவில் 3 புரோக்கர்கள் இருப்பார்கள். தினம் ஒரு இடத்தில் நான் தங்குவேன்.சென்னை ராயப்பேட்டையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்ரில் எனக்கு நிரந்தரமாக அறை உள்ளது.

நான் அந்த ஹோட்டலில் தங்குவது என் நண்பன் சரவணன் ஒருவனுக்கு மட்டுமே தெரியும். சரவணனை பிடித்த போலீசார் அவன் மூலம்என்னையும் கைது செய்துவிட்டனர்.

3 பிரபல நடிகைகள் என்னோடு ரகசியமாக தொடர்பு வைத்து விபசாரத் தொழில் செய்து வந்தனர். போலீஸ் பிடிக்காமல் இருப்பதற்காக போலீஸ்அதிகாரிகளுக்கு அவர்களை அனுப்பி வைத்திருக்கிறேன். அந்த 3 நடிகைகளையும் பெரும்பாலும் மும்பையில் வைத்துத்தான்வாடிக்கையாளர்களுக்கு சப்ளை செய்வேன்.

3 நடிகைளில் ஒருவர் இப்போது இறந்துவிட்டார். 2 நடிகைகள் இப்போதும் என்னுடன் தொடர்பு வைத்துள்ளனர். அவர்கள் பெயர்களை சொல்லவிரும்பவில்லை. சென்னை விபசாரத் தடுப்பு போலீசாருக்கு ஆண்டுதோறும் ரூ. 8 லட்சத்தில் இருந்து ரூ. 10 லட்சம் வரை மாமூல் கொடுத்துள்ளேன்.

2002ல் மட்டும் என்னை கைது செய்து குண்டர் சட்டத்தில் அடைத்தார்கள். அதன் பிறகு போலீசார் என்னை கைது செய்யவில்லை. என்னைதலைமறைவு என்றே கணக்கு காட்டிவிடுவார்கள்.

20 வருடங்களாக விபசார தொழிலை செய்து வருவதால் விபசார அழகிகள் என்னை செல்லமாக அங்கிள் என்று தான் அழைப்பார்கள். இந்ததொழில் மூலம் 20 ஆண்டுகளாக பல ஆயிரக்கணக்கான பெண்களுக்கு நான் வாழ்வு கொடுத்துள்ளேன்.

என்னிடம் தொழில் செய்த பெண்களுக்கு முறைப்படி மருத்துவப் பரிசோதனை செய்து அவர்களுக்கு பாலியல் நோய் வராமல் உரிய பாதுகாப்புகொடுத்துள்ளேன் என கன்னட பிரசாத் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

இதற்கிடையில் விபசாரத் தொழிலில் விருப்பம் இல்லாத அழகிகளை கன்னட பிரசாத், நீலாங்கரை பகுதியில் கடலில் தள்ளி கொலை செய்துவிட்டதாக புகார்கள் எழுந்துள்ளன. இது குறித்து கன்னட பிரசாத்திடம் விசாரணை செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளன்.

வருமானவரித் துறை விசாரணை நடத்த முடிவு:

இதற்கிடையில் வளசரவாக்கம், நீலாங்கரை, பெங்களூர் உள்லிட்ட இடங்களில் பங்களா மற்றும் பண்ணைகளை பிரசாத் வைத்துள்ளார். எனவேஅவனது வருமானம் குறித்து விசாரணை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகள் நடிவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil