காதல் அழகியும், பிரபல கிரிக்கெட் வீரரும் காதலிக்கிறார்களா?
சென்னை: ட்விட்டர் பக்கம் போகிறவர்கள் நடிகை ஒருவருக்கும், கிரிக்கெட் வீரர் ஒருவருக்கும் இடையே என்ன நடக்கிறது என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
அன்பை வெளிப்படுத்தும் படம் மூலம் நடிகையானவர் அந்த இளம் அழகி நடிகை. அண்டை மாநிலத்தை சேர்ந்த அவர் பெரிய வீட்டு மாப்பிள்ளையின் படம் மூலம் கோலிவுட் வந்தார்.
தெலுங்கு திரையுலகில் அம்மணிக்கு அமோக வரவேற்பு உள்ளது. இதனால் தெலுங்கு படங்களில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது பிரபல தெலுங்கு நடிகருக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

தமிழ் படங்கள்
இந்த ஆண்டு அவர் கன்னட திரையுலகிலும் அறிமுகமாகிறார். ஆனால் தமிழ் படங்களில் நடிக்க மட்டும் ஆர்வம் காட்டுவது இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. நடிகை ட்விட்டரில் ரொம்பவே ஆக்டிவ். தனது அழகிய புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பார்.

புகைப்படங்கள்
அரைகுறை ஆடையில் புகைப்படம் எடுத்து வெளியிடும் பழக்கமே இல்லாதவர். அவர் எந்த புகைப்படம் வெளியிட்டாலும் அதை பார்த்து ரசிகர்கள் பாராட்டுகிறார்கள். இந்நிலையில் நடிகையின் ட்விட்டர் பக்கத்தில் ஒரு விஷயம் நடந்துள்ளது. அதாவது நடிகை பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவரின் ட்வீட்டுகளை ரீட்வீட் செய்து வருகிறார்.

கிரிக்கெட் வீரர்
நடிகை ஏன் சம்பந்தமே இல்லாமல் அந்த வேறு மாநிலத்து கிரிக்கெட் வீரரின் ட்வீட்டுகளை ரீட்வீட் செய்கிறார் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினர். இந்நிலையில் அந்த கிரிக்கெட் வீரரும் பதிலுக்கு நடிகையின் ட்வீட்டுகளை லைக் செய்து கொண்டிருக்கிறார். உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடும் இந்திய அணியில் இருக்கும் அந்த வீரர் நடிகையின் ட்வீட்டுகளை லைக் செய்வதை பார்த்துவிட்டு நெட்டிசன்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

தப்பு இல்லை
ஒரு வேளை நடிகையும், கிரிக்கெட் வீரரும் காதலிக்கிறார்களோ, அதனால் தான் ட்விட்டரில் இப்படி ரீட்வீட், லைக்ஸுகள் பறக்கிறதோ என்று நெட்டிசன்கள் பேசிக் கொள்கிறார்கள். அப்படியே அவர்கள் காதலித்தாலும் தவறு இல்லை. அவர்கள் வாழ்க்கை, அவர்கள் இஷ்டம். கிரிக்கெட் வீரர் ஒருவரும், நடிகை ஒருவரும் காதலிப்பதும் புதிது அல்ல. அப்படி அவர்கள் காதலிப்பதாக வதந்தி கிளம்புவதும் புதிது அல்ல. அண்மையில் தான் மற்றொரு கிரிக்கெட் வீரர் மற்றும் பாலிவுட் நடிகையின் பெயர் சேர்ந்து அடிபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











