அங்கிள்ஸ் எல்லாம் ஹீரோவாக நடிக்கும்போது நான் அக்காவா?: நடிகை குமுறல்
சென்னை: நடிகை ஒருவர் தனக்கு திருமணமானதை நினைத்து நொந்து கொண்டிருக்கிறாராம்.
தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருபவர் அந்த அழகும், திறமையும் ஒரு சேர அமைந்த நடிகை. அவர் இடுப்பழகை பார்க்கவே பலர் படம் பார்க்க சென்ற காலம் எல்லாம் உண்டு.

அந்த இஞ்சி இடுப்பழகி தான் விரும்பிய நபரை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். திருமதி ஆன பிறகும் அவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். திருமணத்திற்கு பிறகு அவர் பெரும் எதிர்பார்ப்புடன் ஹீரோயினாக நடித்த படம் அவருக்கு கை கொடுக்குமா, கொடுக்காதா என்ற நிலையில் உள்ளது.
கணவரிடம் ஏகப்பட்ட சொத்து இருந்தாலும் உழைத்து சாப்பிட வேண்டும் என்று நினைக்கிறார் நடிகை. இந்நிலையில் அவரை தேடி ஹீரோயின் அல்ல மாறாக அக்கா, அண்ணி கதாபாத்திரங்கள் தான் வருகிறது. என்னங்க சார், நான் இன்னும் அப்படியே அழகாகவும், இளமையாகவும் இருக்கிறேன் நான் எப்படி அக்கா, அண்ணியாக நடிப்பது என்று கேட்கிறாராம் நடிகை.
கல்யாணமாகிவிட்டால் இப்படி நடிக்கச் சொல்வதா என்று நடிகை குமுறுகிறாராம். அவர் இந்த அளவுக்கு கோபப்பட முக்கிய காரணம் உள்ளது. எந்த ஹீரோக்களுடன் சேர்ந்து டூயட் பாடினாரோ அவர்களுக்கே அக்கா, அண்ணியாக நடிக்கச் சொல்கிறார்களாம். இத்தனைக்கும் அதில் பல ஹீரோக்கள் அங்கிள்ஸ். அவர்கள் எல்லாம் பேரன், பேத்தி எடுத்தும் ஹீரோவாக நடிக்கும்போது நான் திருமதி ஆன பிறகு ஹீரோயினாக நடிக்கக் கூடாதா என்று கொந்தளிக்கிறாராம் நடிகை.
அவர் கொந்தளிப்பதும் நியாயம் தான். ஆனால் நடிகைகளுக்கு திருமணம் ஆகிவிட்டாலே அவர்களை அக்கா, அண்ணி கதாபாத்திரத்திற்கு போடும் மனநிலை தான் தென்னிந்திய திரையுலகில் இன்னும் உள்ளது.
திருமணத்திற்கு பிறகு எனக்கு அந்த அளவுக்கு பட வாய்ப்புகள் வருவது இல்லை என்று சமத்து நடிகையே தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த இடுப்பழகிக்கு வாய்ப்புகள் வராதது ஆச்சரியம் அளிக்கவில்லை.


Click it and Unblock the Notifications











