“அய்யய்யோ அந்த ஹீரோயினா வேணவே வேணாம்.. ஆளை விடுங்கப்பா”.. தெறித்து ஓடும் இயக்குநர்கள்!

வளர்ந்து வரும் நடிகை ஒருவர், கதை சொல்ல வரும் இயக்குனர்களை டார்ச்சர் செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

Recommended Video

#Gossip ஆளை விடுங்கப்பா”..தெறித்து ஓடும் இயக்குநர்கள்!-வீடியோ

சென்னை: வளர்ந்து வரும் நடிகை ஒருவர், கதை சொல்ல வரும் இயக்குனர்களை டார்ச்சர் செய்து வருகிறாராம். இதனால் ஹீரோக்களோ, தயாரிப்பாளர்களோ அந்த நடிகையை பரிந்துரைத்தால், இயக்குனர்கள் கட்டாயம் நோ சொல்லிவிடுகிறார்களாம்.

சந்தன வாசம் வீசும் ஊரை சேர்ந்தவர் அந்த நடிகை. சொந்த மொழியில் அறிமுகமாகி சில படங்களில் நடித்தார். அப்போது பக்கத்து மாநிலத்தில் இருந்து நடிகைக்கு ஒரு பட வாய்ப்பு வந்தது. அந்த பட ஹீரோவின் முதல் படத்தின் வெற்றியை பார்த்து ஓகே சொல்விட்டார்.

நடிகையின் நேரம் சூப்பராக இருந்ததால், அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. மேலும், நடிகைக்கு என தனி ரசிகர் பட்டாளமே உருவானது. இதையடுத்து, அதே ஹீரோவுடன் சேர்ந்து அடுத்தப்படத்திலும் நடித்தார். அதுவும் சூப்பர் ஹிட். அந்த ஹீரோவை அவர் காதலிப்பதாகவும் கிசுகிசுக்கப்பட்டது.

கொட்டும் பட வாய்ப்புகள்

கொட்டும் பட வாய்ப்புகள்

இதற்கிடைய நடிகைக்கு பட வாய்ப்புகள் கொட்ட ஆரம்பித்துள்ளது. . தமிழில் ஒரு படத்தில் அவர் நடிக்கிறார். ஆனால் நடிகை எல்லா வாய்ப்புகளையும் ஏற்காமல், மிக நிதானமாக படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்

பல முறை கதை கேட்கிறார்

பல முறை கதை கேட்கிறார்

ஆனால் கதை சொல்ல வரும் இயக்குனர்களை நடிகை பாடாய்படுத்தி எடுக்கிறாராம். ஒரு முறைக்கு மூன்று முறை கதை சொல்ல வேண்டி இருக்கிறதாம். அப்போதும் அதை ஓகே செய்யாமல் இழுத்தடித்து வருகிறாராம்.

நடிகைகளின் மார்க்கெட்

நடிகைகளின் மார்க்கெட்

'காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ள வேண்டும்' என்பது தான் இந்திய சினிமாக்களில், அதுவும் தென்னிந்திய சினிமாக்களில் நடிகைகளின் நிலைமை. நடிகைகளின் மார்க்கெட் கொஞ்சம் குறைந்தாலும், அடுத்த ஆளை கமிட் செய்துவிட்டு போய்க்கொண்டே இருப்பர். ஒன்றிரண்டு வருடங்களிலேயே அப்படி காணாமல் போனவர்கள் ஏராளம்.

யதார்த்தம் புரியவில்லை

யதார்த்தம் புரியவில்லை

ஆனால் இந்த யதார்த்தம் புரியாமல், நல்ல அழுத்தமான கதையாக பார்த்து தேர்ந்தெடுத்து நடிக்கிறேன் என்கிறாராம் அந்த நடிகை. இதனால் இயக்குனர்கள் மட்டுமல்லாமல் ஹீரோக்களும், தயாரிப்பாளர்களும் இப்போதே நடிகையை ஓரங்கட்ட ஆரம்பித்துவிட்டனர். அந்த நடிகை நடித்து ஒரு நேரடி தமிழ் படம் கூட வெளிவரவில்லை என்பது கூடுதல் தகவல்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X