மீண்டும் முதல்பட ஹீரோவிடம் சென்று வாய்ப்பு கேட்ட பிரபல நடிகை.. அப்போ அதெல்லாம் பொய்யா?

மீண்டும் தமிழில் பட வாய்ப்புகளைத் தேட தொடங்கியுள்ளாராம் காதல் அழியக்கூடாது என போராடிய நடிகை.

சென்னை: மீண்டும் தமிழில் பட வாய்ப்புகளைத் தேட தொடங்கியுள்ளாராம் சர்ச்சைகளுக்குப் பேர் போன நடிகை.

வம்பு நடிகரின் முதல் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இந்த நடிகை. பூசினாற் போன்ற உடல்வாகுடன் இருந்த அவரை, தமிழ் ரசிகர்களுக்குப் பிடித்துப் போனாலும், ஏனோ தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

Actress asks movie chance to her debut hero

இதனால் தெலுங்கு திரையுலகத்திற்குப் பறந்தார் நடிகை. அங்கு அவருக்கு அடுத்தடுத்து வெற்றிப் படங்கள் அமைந்ததால், முன்னணி நடிகைகளுள் ஒருவரானார். ஆனால் சர்ச்சைகள் பலவற்றில் சிக்கி அவப்பெயரைச் சம்பாதித்தார். கடைசியில் போதை கும்பலுடன் கூட நடிகையின் பெயர் அடிபட்டது.

இதனால் மனம் வெறுத்துப் போனவர், இனி நடிக்கப் போவதில்லை என அதிரடியாக அறிவித்தார். இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் அதெல்லாம் வெறும் நடிப்பு தானாம்.

உண்மையில் நடிகை தற்போது தமிழில் மீண்டும் பட வாய்ப்புகளைத் தேடும் வேலையை ஆரம்பித்திருக்கிறாராம். இதற்காக தனது முதல் நாயகனைச் சந்தித்து, அவரிடம் தனக்கு சிபாரிசு செய்யும்படி கேட்டுக் கொண்டாராம். நடிகரும் அப்போதைக்கு நடிகையிடம் ஓகே சொல்லி விட்டாராம்.

சம்பந்தப்பட்ட நடிகரின் படங்களே தொங்கலில் உள்ள நிலையில், அவர் எப்படி இந்த நடிகைக்கு சிபாரிசு செய்ய முடியும். ஆனாலும், நடிகர் தனக்கு சிபாரிசு செய்வார், தமிழில் நிச்சயம் ஒரு ரவுண்டு வரலாம் என்ற கனவில் இருக்கிறாராம் நடிகை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X