»   »  இந்த நடிகை தனது திருமணத்தை நிறுத்த ஒல்லி காரணமாமே?

இந்த நடிகை தனது திருமணத்தை நிறுத்த ஒல்லி காரணமாமே?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சின்ன நம்பர் நடிகை தனது திருமணத்தை நிறுத்த ஒல்லியும் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

சின்ன நம்பர் நடிகை தொழில் அதிபருடனான திருமணத்தை நிச்சயதார்த்தத்தோடு நிறுத்துவிட்டார். அந்த திருமணம் நிற்க ஒல்லி தான் காரணம் என்று அப்போது பேச்சாகக் கிடந்தது.

Actress calls off wedding: Is Olli the reason?

நடிகை தனது திருமணத்தை நிறுத்தியதற்கான காரணத்தை அண்மையில் தெரிவித்தார். இந்நிலையில் நடிகையின் திருமணம் நிற்க ஒல்லியும் முக்கிய காரணம் என்ற பேச்சு மறுபடியும் கிளம்பியுள்ளது.

ஒல்லியும், நடிகையும் பல ஆண்டுகளாக நண்பர்கள். நண்பர் என்ற முறையில் நடிகை ஒல்லியை தனது நிச்சயதார்த்தத்திற்கு அழைக்க அவரும் வந்துள்ளார். ஒல்லிக்கும், நடிகைக்கு நிச்சயித்த மாப்பிள்ளைக்கும் ஆகாதாம்.

இந்த காரணத்தால் நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் ஒல்லியை பார்த்த மாப்பிள்ளை கடுப்பாகி நடிகையிடம் விவாதித்துள்ளார். எனக்கு நண்பர்கள் முக்கியம், அவர்களை விட்டுக் கொடுக்க மாட்டேன் என நடிகை தெரிவித்த அந்த நேரம் அங்கு வந்த மாப்பிள்ளையின் தந்தை இதில் மூக்கை நுழைத்தாராம்.

உங்க வேலையை பார்த்துக் கொண்டு போங்க என நடிகை கூற தனது தந்தையை மதிக்கவில்லை என்று மாப்பிள்ளை கடுப்பானாராம். ஒல்லியை பார்த்த அன்றே நடிகைக்கும், மாப்பிள்ளைக்கும் இடையே பிரச்சனை வெடித்துவிட்டதாம்.

English summary
Buzz is that Olli's friendship with number actress is the reason for her wedding being called off.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil