twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அண்ணனின் முன்னாள் மனைவி... ஆத்திரத்தில் தம்பி நடிகர்!

    By Sudha
    |

    அண்ணனின் முன்னாள் மனைவியுடன் வம்பு நடிகர் டூயட் பாடத் துடிப்பதை அறிந்து ஆத்திரத்தில் இருக்கிறாராம் தம்பி நடிகர்.

    இத்தனைக்கும் வம்பும் தம்பியும் நேரில் பார்க்கும்போதெல்லாம் கட்டியணைத்து உருகுவார்கள்.

    அண்ணனின் ஸ்வீட் மனைவி சமீபத்தில் விவாகரத்து பெற்று சுதந்திரப் பறவையாக வாய்ப்புகள் தேடி வருகிறார். அவரது படு கவர்ச்சியான ஸ்டில்கள்தான் இப்போது கோடம்பாக்கத்தையே கலக்கி வருகின்றன.

    சமீபத்தில் வம்பு நடிகரின் படத்தில் ஹீரோயினுக்கு நிகரான வாய்ப்பு ஸ்வீட் நடிகைக்குக் கிடைத்தது. அத்துடன், படு நெருக்கமாக ஒரு பாடலில் ஒத்துழைப்பு கொடுத்துள்ளாராம் நடிகை.

    விஷயம் காதுக்கு வந்ததும் தம்பி நடிகருக்கு பெரும் ஆத்திரமாம். இதுபற்றி வம்புக்கு வேண்டப்பட்டவர்களிடமும் சொல்லிப் புலம்பினாராம்.

    'தாலியும் இல்ல, வேலியும் இல்ல... தானா வாய்ப்புக் கேட்டு வந்தாங்க. சொன்னமாதிரி நடிக்கவும் ஒப்புக்கிட்டாங்க. இதுல இவருக்கு ஏன் எரியுது?' என்று நக்கலடித்தாராம் வம்பு.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X