இவங்கள நம்பி ஒரு வருசம் வீணாப் போச்சே... ரூட்டை மாற்றிய ’பேய்’ நடிகை!
படவாய்ப்புகளுக்காக வயதான தயாரிப்பாளர்களிடம் நட்பு வளர்க்கத் தொடங்கியிருக்கிறாராம் பேய் நடிகை.
சென்னை: பேய் படத்தில் அறிமுகமான ஸ்டோன்குயின் நடிகைக்கு, தற்போது கைவசம் பெரிய படங்கள் இல்லை. சின்ன சின்ன நடிகர்களை நம்பி, கடந்தாண்டை வீணடித்தவர், இந்தாண்டு எப்படியும் தமிழின் முன்னணி நடிகையாகிவிட வேண்டும் என சபதம் எடுத்துள்ளாராம்.
இசை நடிகருடன் திகில் படத்தில் அறிமுகமானவர் இந்த நடிகை. நடிகையின் அழகு மற்றும் நடிப்புத் திறமையால் அடுத்தடுத்து கை நிறைய பட வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால், படத்தைத் தேர்வு செய்வதில் தவறு செய்த நடிகை, சிறு சிறு நடிகர்களின் படங்களுக்கெல்லாம் ஓகே சொன்னார். இதனால் முன்னணி நடிகர்கள் பட வாய்ப்புகள் எதுவும் நடிகைக்கு கிடைக்கவில்லை.

அடுத்தடுத்து அவரது படங்கள் ரிலீசான போதும், எதுவும் சொல்லிக் கொள்ளும் வகையில் வெற்றி பெறவில்லை. இதனால் நடிகையை முன்னணி இயக்குநர்கள் தோல்விப்பட நாயகி என ஒதுக்கி விட்டனர். தற்போது கைவசம் ஒரே ஒரு படம் தான் நடிகையிடம் உள்ளது.
இப்போது தான் நடிகைக்கு தனது நிலை புரிந்துள்ளது. சின்ன சின்ன நடிகர்களை நம்பி மோசம் போய் விட்டோமே, ஒரு வருடம் வீணாகி விட்டதே என தெரிந்தவர்களிடம் புலம்பி வருகிறாராம். எப்படியும் விட்ட மார்க்கெட்டை பிடித்தே தீருவது என முடிவு செய்துள்ள நடிகை, வயதான முன்னணி தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களிடம் பட வாய்ப்புக்காக நட்பு வளர்க்கத் தொடங்கியுள்ளாராம்.


Click it and Unblock the Notifications











