அது வேற வாய்.. இது வேற வாய்.. தமிழின் நம்பர் ஒன் நடிகையாகணும்.. ரூட்டை மாற்றிய நடிகை!

நம்பர் ஒன் நடிகையாகியே தீருவது என முடிவு செய்துள்ளாராம் வாரிசு நடிகை.

Recommended Video

நம்பர் ஒன் நடிகையாகணும்.. ரூட்டை மாற்றிய நடிகை!- வீடியோ

சென்னை: எப்படியும் தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நடிகை இடத்தைப் பிடித்தே தீருவது என தீவிரமாக செயல்பட்டு வருகிறாராம் வாரிசு நடிகை.

முதல்படம் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வெற்றி பெறாததால், அதிர்ஷ்டமில்லா நடிகை என்ற முத்திரை குத்தப்பட்டவர் வாரிசு நடிகை. ஆனால், அடுத்து அவர் நடித்த சூப்பர் பெயருடைய படம் தாறுமாறு வெற்றி பெற்று நடிகையின் நிலையை மாற்றியது. இதனால், நடிகையின் கைவசம் பட வாய்ப்புகள் அதிகரித்தன. ஆனாலும் வெற்றித் தோல்வி என ஏற்ற இறக்கமாகவே அமைந்து வருகிறது.

Actress changes her approach 31-10-2018

இது ஒருபுறம் இருக்க, எப்போதும் படப்பிடிப்பிற்கு பாதுகாவலருடனே வருவது நடிகையின் வழக்கம். இதனால் நாயகர்கள் அவருடன் கேமராவைத் தாண்டி பேச இயலுவதில்லை.

இந்நிலையில், நம்பர் நடிகையைப் போலவே தானும் தமிழில் நம்பர் ஒன் நடிகை இடத்தைப் பிடிக்க வேண்டும் என்ற ஆசை நடிகைக்கு ஏற்பட்டுள்ளதாம். இந்த ரூட்டில் சென்றால் இது வேலைக்கு ஆகாது என முடிவு செய்த நடிகை, தனது ரூட்டை மாற்றியுள்ளார்.

இதனால் படப்பிடிப்பிற்கு பாதுகாவலர்களை அழைத்து வருவதை குறைத்துள்ளாராம். கூடவே தானே வாண்டடாகச் சென்று சக நடிகர்களுடன் ஓய்வு நேரங்களில் பேசுகிறாராம். இதன் மூலம் அவர்களுடனான நட்பை அதிகரித்து, அவர்களின் அடுத்தடுத்த படங்களில் நாயகி ஆவது தான் அவரின் திட்டம்.

ஏற்கனவே முன்னணி நடிகர்களுடன் தான் தற்போது அவர் அதிகமாக நடித்து வருகிறார். ஆனாலும் பெரும்பாலான படங்களில் அவரின் கதாபாத்திரத்திற்கு நடிப்பதற்கு அதிக வாய்ப்பில்லை என்ற குறை உள்ளது. இந்த நிலையை மாற்றி, திறமையான நடிகை என்ற பெயரைப் பெற்று தமிழின் நம்பர் ஒன் நடிகையாக வேண்டும் என்பது தான் அவரின் எதிர்காலத் திட்டம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X