சங்கம் எச்சரித்ததால் புரமோஷனுக்கு வந்த நடிகை
நேற்று முளைத்த காளான்கள் கூட அஜித்தை ஃபாலோ பண்ணுகிறேன் என்ற டயலாக்கை விட்டு தாங்கள் நடிக்கும் படங்களின் புரமோஷன் பக்கம் எட்டிக்கூட பார்க்க மாட்டேன் என்கிறார்கள். ஒரு வாரம்தான் ஒரு படத்துக்கு அதிகபட்ச ஆயுள் என்று முடிவாகி விட்டதால் இந்த அரைகுறைகளின் ஆட்டத்தால் தயாரிப்பாளர்கள் தான் நசுக்கப்படுகிறார்கள்.
சில வாரங்களுக்கு முன்னர் ஒரு படத்தின் பிரஸ்மீட்டுக்கு ஸ்வீட் நடிகை வரவில்லை. இதனை இயக்குநர் பாக்யராஜே அந்த பிரஸ்மீட்டில் நடிகையை பற்றி பேச அது பரபரப்பானது. இதனையடுத்து தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர் சங்கம் மூலம் நடிகைக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

எனவே சமீபத்தில் நடந்த பேய் பட பிரஸ்மீட்டுக்கு வருகை தந்தார் நடிகை...
அப்படியே அந்த அஜித்துக்கு... ஓ... அவர் நடிகர் சங்க பொதுக்குழுவுக்கே வர மாட்டார்ல?
Comments


Click it and Unblock the Notifications