பார்க்கவே அருவருப்பு.. தோல் நோயால் பாதிக்கப்பட்ட தொழிலதிபர்.. கடனை அடைக்க அட்ஜஸ்ட்மென்ட் செய்த நடிகை
சென்னை: சினிமா என்றாலே அதில் நடிகைகள் பலவிதமான அட்ஜஸ்ட்மென்ட்களை செய்ய வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக இருக்கிறது. இது குறித்து பல நடிகைகள் வெளிப்படையாக தற்போது பேச தொடங்கியிருக்கும் நிலையில் பத்திரிக்கையாளர் ஒருவர் youtube தளத்தில் வெளிப்படையாக பேசி உள்ளார்.
அதில், நடிகைகள் அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொள்வதை நான் ஆதரிக்க மாட்டேன். இருந்தாலும், அவர்களின் சூழ்நிலை என்ன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். சிலர் சொல்வது போல பாடி டிமாண்டிங் என்று ஒட்டுமொத்தமாக இதை சொல்லிவிட முடியாது. என்னை பொறுத்தவரை எந்த பெண்ணும் விரும்பி அட்ஜஸ்ட்மென்ட் செய்கிறார்கள் என்று சொல்லிவிட முடியாது. இப்படி செய்தால் தான் படவாய்ப்பு கிடைக்கும், பட வாய்ப்பு கிடைத்தால் தான் குடும்பத்தை நடத்த முடியும் என்ற காரணத்திற்காக இதுபோன்ற அட்ஜஸ்ட்மென்ட்களை செய்கிறார்கள். இதனால் அட்ஜஸ்ட்மென்ட் செய்யும் நடிகைகள் அனைவருமே தவறானவர்கள் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.

கடன்சுமையில் நடிகை: இதற்கு உதாரணமாக ஒரு நடிகையை பற்றி சொல்கிறேன், ஒரு மிகப்பெரிய நடிகை கடுமையான கடன் சுமையில் சிக்கிக் கொண்டார். இதனால், கடன் கொடுத்தவர்கள் வீடு தேடி வந்து அவமானப்படுத்துகிறார்கள். இந்த செய்தி பத்திரிகைகளில் வெளிவருகிறது. இந்த கடன் சுமையிலிருந்து எப்படி மீண்டு வருவது என்று தெரியாமல், அந்த நடிகை திண்டாடிக் கொண்டு இருக்கிறார். பல நடிகர்களிடம் எனக்கு உதவி செய்யுங்கள் என கெஞ்சியும் பார்த்து இருக்கிறார். யாரிடம் இருந்தும் அதன் நடிகைக்கு உதவி வரவே இல்லை ஒரு கட்டத்தில் அந்த நடிகை வாழ்ந்த வீடு ஏலம் போகிறது. அந்த நேரத்தில் நடிகைக்கு ஒரு ஆஃபர் வருகிறது.
நடிகைக்கு வந்த ஆஃபர்: பெரிய பணக்காரரான குஷ்டரோகி ஒருவருடன் அட்ஜெஸ்ட்மென்ட் செய்து கொண்டால், மொத்த கடன் சுமையில் இருந்து மீண்டுவிடலாம் என்ற ஆஃபர் வருகிறது. அந்த நடிகை கொஞ்சம் கூட யோசிக்காமல் அட்ஜஸ்ட்மென்ட்க்கு ஓகே சொல்லிவிட்டார். இதனால், தனக்கு என்ன பாதிப்பு வரும் என்பதை பற்றியெல்லாம் அந்த நடிகை கவலைப்படவில்லை. அதற்கு காரணம், அந்த நடிகை சந்தித்த அவமானங்கள், மன உளைச்சல்கள் அதில் இருந்து வருவதற்கு இது ஒன்றுதான் வழி வேறு வழியே இல்லை என்று முடிவு செய்துவிட்டார். அந்த நடிகைக்கு யாரும் உதவி செய்யாத நிலையில், அவர், அட்ஜெஸ்ட்மென்ட் செய்தது எப்படி ஒரு தவறான முடிவாகும். அந்த நடிகை கெஞ்சும் போது யாரும் உதவி செய்யவில்லையே, நான் ஒழுக்கமாக இருக்கிறேன், என் குடும்பத்தை ஒழுக்கமாக பார்த்துக்கொள்கிறேன் என்பதற்காக மற்றவர்களை கீழ் தனமாக பேசக்கூடாது என்று அந்த பேட்டியில் அந்த பிரபலம் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











