இதுக்கு நீங்க ரெடின்னா, நடிக்க நான் ரெடி: இயக்குநர்களிடம் பளிச்சென்று கூறும் நடிகை
சென்னை: இளம் நடிகை ஒருவர் புதுப்படத்தில் நடிக்க கன்டிஷன் போடுகிறாராம்.
அழகான நடிகை அவர். தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வருகிறார். தமிழில் வேகமாக வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக உள்ளார். முக்கியமாக ஹீரோக்களுக்கு பிடித்த நடிகையாக இருக்கிறார்.
படத்தில் கவர்ச்சி காட்டச் சொன்னால் அதிர்ச்சி அடைவது இல்லை, முடியாது என்று அடம்பிடித்து இயக்குநரை கதற விடுவது இல்லை. கதைக்கு தேவையாக இருக்கா சார், நடிக்கிறேன் என்று கூறி தாராளமாக நடித்துக் கொடுக்கிறார்.

செட்டில் ஹீரோக்களுடன் ஜாலியாக சிரித்துப் பேசுகிறார். தன் ஷாட் முடிந்ததும் அம்மாவுடன் போய் தனியாக உட்காராமல் தங்களுடன் கடலை போடுவதால் ஹீரோக்களுக்கு அம்மணியை பிடித்துள்ளது.
அம்மணியின் நல்ல குணத்தால் அவரை தங்களின் படங்களில் நடிக்க வைக்க இயக்குநர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். அதனால் அவரைத் தேடி பட வாய்ப்புகள் வந்து குவிகின்றன. மேலும் விளம்பர படங்களிலும் நடிக்கத் துவங்கியுள்ளார். பெரிய இடத்து விளம்பரங்களில் நடிக்கும் வாய்ப்புகள் வருகின்றது.
அவர் போலீஸ்காரர் ஜோடியாக நடித்த படத்தில் அவரின் நடிப்பை யாருமே கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து போலீஸ்கார் ஜோடியாக நடிக்க மாட்டேன் என்று அடம்பிடிக்கிறாராம். ஹீரோவுக்குத் தான் முக்கியத்துவம் என்றாலும் என்னை அழகாக காட்டினால் நிச்சயம் நடிக்கிறேன் என்கிறாராம் அம்மணி. அழகாக காட்டுவது பெரிய விஷயமா ஜமாய்ச்சுடுவோம் என்கிறார்களாம் இயக்குநர்கள்.
பிற நடிகைகள் ஏதேதோ கன்டிஷன் போட்டு இயக்குநர்களை கடுப்பேற்றும் நிலையில் இந்த அம்மணி போடும் கன்டிஷன்கள் எல்லாம் ஒன்றுமே இல்லை. அவரின் மார்க்கெட் தற்போது தான் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. கொஞ்சம் வளர்ந்த பிறகு சம்பள விஷயத்தில் கன்டிஷன் போடுவார் என்று எதிர்பார்க்கலாம்.
அந்த கன்டிஷன் போடும் போது தான் தயாரிப்பாளருக்கு கடுப்பேறும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











