ஆப்பிள் கன்ன நடிகையை காதலிக்கும் வாரிசு இயக்குநர்?
சென்னை: இயக்குநர் ஒருவரும், ஆப்பிள் கன்ன நடிகையும் காதலிப்பதாக கூறப்படுகிறது.
நல்லா நடிக்கத் தெரிந்த நடிகை அவர். அவரை தங்கள் படங்களில் நடிக்க வைக்க கோலிவுட் இயக்குநர்கள் பலர் முயன்று தோற்றனர். இந்நிலையில் தான் அவர் அந்த இளம் இயக்குநரின் படத்தில் நடித்தார்.
அந்த படத்தை முடித்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார் நடிகை. கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாகியுள்ளார்.

காதல்
நடிகையும், அந்த இளம் இயக்குநரும் காதலிப்பதாக கோடம்பாக்கத்தில் ஒரே பேச்சாக உள்ளது. என்னது அந்த நடிகையும், இயக்குநருமா, நம்பவே முடியவில்லையே என்று ரசிகர்கள் வியப்படைந்துள்ளனர்.

அறிவிப்பு
நடிகையும், இயக்குநரும் தங்களின் காதலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல தீர்மானித்துள்ளார்களாம். அதாவது திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார்களாம். இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

முன்பும் கூட
அந்த இயக்குநரும், அண்டை மாநிலத்தை சேர்ந்த நடிகை ஒருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக அண்மையில் வதந்தி பரவியது. அதை அந்த இயக்குநர் மறுத்தார். இந்நிலையில் மீண்டும் அவரின் திருமண பேச்சு கிளம்பியுள்ளது.

அழகி
இயக்குநரின் பெயர் அவ்வப்போது ஏதாவது ஒரு நடிகையுடன் சேர்ந்து அடிபடுகிறது. முன்னதாக இடுப்பழகி நடிகையுடனும் அவர் பெயர் அடிபட்டது. நான் யாரையும் காதலிக்கவில்லை என்று அவ்வப்போது விளக்கம் அளிப்பதே அவருக்கு ஒரு வேலையாகிவிட்டது.


Click it and Unblock the Notifications











