»   »  இனியும் கிஸ்ஸிங் கிங்கை நம்பக் கூடாது: உயர்ந்த நடிகை முடிவு

இனியும் கிஸ்ஸிங் கிங்கை நம்பக் கூடாது: உயர்ந்த நடிகை முடிவு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: முத்த நாயகனை இனியும் நம்பினால் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காது என்று உயர்ந்த நடிகை ஒருவர் தானாக வாய்ப்பு தேட ஆரம்பித்துவிட்டார்.

வானில் கலர் கலராகத் தோன்றும் அழகின் பெயர் கொண்ட படத்தில் ஆக்ஷன் கிங்குடன் நடித்து கோலிவுட் வந்தவர் அந்த உயரமான நடிகை. கேரளாவில் பிறந்தாலும் அருமையாக தமிழில் பேசுவார், பாடுவார். முத்தம் கொடுக்க பெயர் போன நாயகனுக்கு கூட ஜோடியாக நடித்தார்.

Actress decides not to trust a senior hero

அதன் பிறகு தனது நீண்ட நாள் காதலரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆனார். இருப்பினும் நடிக்கும் ஆசை விடாததால் முத்த நாயகனை நம்பி இந்தியா வந்தார். அவர் விஸ்வரூபமெடுத்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பி தான் நடிகை வந்தார். ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை.

சரி அவர் மலையாளத்தில் ஹிட்டான படத்தின் ரீமேக்கில் நடிக்கும் படத்திலாவது வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பினார். ஆனால் அந்த படத்தில் நாயகனின் நெருங்கிய தோழி நடிக்கிறார். இந்நிலையில் தான் இனியும் அவரை நம்பி பலனில்லை என நடிகை தனியாக வாய்ப்பு தேடினார். பலன் கை மேல் கிடைத்துவிட்டது.

ஆம் சிங்கத்தின் மனைவி ரீ என்ட்ரி கொடுக்கும் படத்தில் நடிகையும் உள்ளார்.

English summary
A tall actress has decided not to trust a senior hero for chances.
Please Wait while comments are loading...