அவளுக்கு மட்டும் ஒர்க் அவுட் ஆகுது, எனக்கு மட்டும் ஏன் ஓரம்கட்டுது.. நடிகையின் கவலை!
சென்னை: பேய் படங்களில் இனி நடிப்பது இல்லை என்று சின்ன நம்பர் நடிகை முடிவு செய்துள்ளாராம்.
சர்ச்சை நடிகைக்கும் பேய் படங்களுக்கும் அப்படி ஒரு ராசி. அவர் நடிக்கும் பேய் படங்கள் எல்லாம் வெற்றி பெறுகின்றன. இதை பார்த்த சின்ன நம்பர் நடிகையும் பேய் படங்களில் கமிட்டானார்.

சர்ச்சை நடிகை போன்று சின்ன நம்பர் நடிகைக்கு பேய் கை கொடுக்கவில்லை. அவர் நடிப்பில் வெளியான 3 பேய் படங்களுமே தோல்வி அடைந்தது.
இத்தனைக்கும் எந்த பேய் படம் வந்தாலும் தியேட்டருக்கு சென்று பார்த்து அதை ஹிட்டாக்கும் ரசிகர்கள் இருந்தும் சின்ன நம்பர் நடிகையின் படங்கள் மட்டும் ஊத்திக் கொண்டன.
பேயை நம்பி ஏமாந்த நடிகை இனிமேல் பேய் படங்களில் நடிப்பது இல்லை என்று முடிவு செய்துள்ளாராம். பேய் படங்களால் வேற லெவலுக்கு சென்றுவிடலாம் என்று நினைத்து ஏமாந்து நொந்து போயிருக்கிறாராம் நடிகை.


Click it and Unblock the Notifications









