பட்டதெல்லாம் போதும்.. இனி அவர் படங்கள் வேண்டவே வேண்டாம்.. பிரபல நடிகை எடுத்த அதிரடி முடிவு!

சென்னை: தமிழ் நடிகை ஒருவர் டாப் ஹீரோ படங்களில் இனி நடிப்பதில்லை என முடிவு செய்துள்ளாராம்.

தமிழ் சினிமாவின் டாப் ஹீரோயின் அவர். ஒருகாலத்தில் அவர் நடித்த படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். நடிகையை கனவுக்கன்னியாக கொண்டாடினார்கள் ரசிகர்கள்.

தென்னிந்தாவின் பெரிய ஹீரோக்கள் எல்லாம் நடிகையை தங்களுக்கு ஜோடியாக்குவதில் அதிக ஆர்வம் காட்டினர். வளர்ந்து வரும் நடிகர்கள் கூட, அந்த நடிகையுடன் ஒரு படத்திலாவது நடித்துவிட மாட்டோமா என ஏங்கினர்.

Actress decides to avoid a top hero

சொல்லி வைத்தது போல் தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து ஹீரோக்களும் அந்த நடிகையுடன் ஒரு படத்தில் நடித்தனர். தயாரிப்பாளர்கள் எல்லாம் நடிகையின் கால்ஷீட்டுக்காக தவம் கிடந்தனர். இதனால் நடிகையின் சம்பளமும் கனிசமாக உயர்ந்தது. இப்போதைக்கு அதிக சம்பளம் வாங்கும் நடிகை அவர் தானாம்.

டாப் ஹீரோக்களுடன் நடிப்பது ஒருபக்கம் இருந்தாலும், தனக்கு முக்கியத்துவம் உள்ள ஹீரோயின் சப்ஜெட்டுகளை தேடித்தேடி நடித்தார். அந்த படங்களும் சூப்பர் ஹிட்டானதால் நடிகையின் மார்க்கெட் மேலும் உயர்ந்தது. இதனால் தன்னை மட்டுமே நம்பி வந்த இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அழகு பார்த்தார் அவர்.

ஆனால் தற்போது நடிகைக் நேரம் சரியில்லை. கடந்த ஓராண்டாக அவரது படங்கள் எல்லாம் அட்டர்பிளாப். அதுவும் பல ரிலீஸ் தேதிகளை கடந்து, ஒருவழியாக தியேட்டருக்கு வந்த அவரது ஒரு படம், வந்த சுவடே தெரியாமல் தியேட்டரில் இருந்து ஓடிவிட்டது.

இப்படி அடி மேல் அடி வாங்கி வந்த நடிகைக்கு இருந்த ஒரு நம்பிக்கை டாப் ஹீரோ ஒருவரின் படம். ஆனால் அந்த படமும் எதிர்பார்த்த ரிசல்ட்டை கொடுக்கவில்லை. மேலும் நடிகைக்கு அந்த படத்தில் எந்த முக்கியத்துவமும் இல்லை. ஹீரோ பின்பு சுற்றும் அதே வழக்கமான ரோல் தான்.

இதனால் கடுப்பான நடிகை இனி அந்த ஹீரோவின் படத்தில் நடிக்கவே கூடாது என முடிவு செய்துள்ளாராம். இவரைவிட மற்றொருவர் எவ்வளவோ பரவாயில்லை என நடிகை நினைக்கிறாராம். அவர் படத்திலாவது தனக்கான முக்கியத்துவம் இருந்தது, ஆனால் இவர் படத்தில் எதுவுமே இல்லை என புலம்பிகிறாராம்.

மற்றொரு பெரிய ஹீரோவுடன் நடித்துள்ள படத்தை தான் அவர் பெரிதும் எதிர்பார்த்திருக்கிறார். ஆனால் அதுவும் கைக்கொடுக்கவில்லை என்றால், சொந்த படத்தில் மட்டுமே நடிப்பது என அவர் முடிவு செய்துள்ளாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X