கை கொடுக்காத கவர்ச்சி: வில்லங்க முடிவு எடுத்த நடிகை
சென்னை: கவர்ச்சி கை கொடுக்காததால் இளம் நடிகை ஒருவர் வில்லங்கமான பாதையில் செல்ல முடிவு செய்துள்ளார்.
வேறு மாநிலத்தில் இருந்து வந்து கோலிவுட்டின் முன்னணி நடிகையானார் அவர். வந்த போது பூசினாற் போன்று இருந்த அவர் தற்போது ஒல்லிக்குச்சியாக உள்ளார்.
அவர் தனது உடல் எடையை குறைத்ததில் இருந்து மார்க்கெட் படுத்துவிட்டது.

புதுப்படம்
அந்த நடிகை தற்போது நடித்து வரும் படம் சர்ச்சைக்குரிய கதை கொண்டது. அதனாலேயே அந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. ஆனால் அது படத்திற்கு விளம்பரமாக அமைந்துவிட்டது.

முடிவு
சர்ச்சை கதைகளில் நடித்தால் அனைவரின் கவனத்தையும் பெறலாம், படமும் ஓடும் என்று நடிகைக்கு தற்போது புரிந்துள்ளது. இதையடுத்து இனி நடித்தால் சர்ச்சை கதைகளில் தான் நடிப்பது என்று அவர் முடிவு செய்துள்ளாராம்.

இயக்குநர்கள்
தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குநர்களிடம் சர்ச்சை கதையாக இருந்தால் சொல்லுங்கள் இல்லை என்றால் நடையை கட்டுங்க என்கிறாராம் நடிகை. விட்ட மார்க்கெட்டை சர்ச்சை கதை கொண்ட படங்களில் நடித்து பிடிப்பது என்பது அவரின் திட்டமாம்.

மார்க்கெட்
சர்ச்சை நடிகை வில்லங்கமான கதை கொண்ட படங்களில் தொடர்ந்து நடித்து தனது மார்க்கெட்டை உச்சத்தில் வைத்துள்ளார். அவர் வழியில் செல்வது என்று இந்த நடிகையும் முடிவு செய்திருக்கிறார். இருவரின் தனிப்பட்ட வாழ்கையில் கூட ஒரு ஒற்றுமை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











