பட வாய்ப்புகளே சுத்தமாக இல்லை.. ஒரேயடியாக சினிமாவுக்கு முழுக்கு போட முடிவெடுத்த பிரபல நடிகை
பட வாய்ப்புகள் இல்லாததால் சினிமாவுக்கு முழுக்கு போடும் முடிவில் இருக்கிறார் பிரபல நடிகை ஒருவர்.
சென்னை: பிரபல தமிழ் நடிகை ஒருவர் புதிய பட வாய்ப்பு எதுவும் கிடைக்காத காரணத்தால், சினிமாவில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பக்கத்து மாநிலத்தை சேர்ந்த நடிகை அவர். அந்த ஊர் சினிமாவில் நிறைய படங்களில் நடித்து வந்தார். அவரை தமிழுக்கு அழைத்து வந்தார் தங்கமான இயக்குனர் ஒருவர்.
முதல் படமே சூப்பர் ஹிட்டானதால் நடிகைக்கு அடுத்தடுத்து படங்கள் குவிந்தன. பெரிய ஹீரோக்களுடன் எல்லாம் சர்வசாதாரணமாக ஜோடிபோட்டார். இதனால் தமிழ்நாட்டிலேயே டெண்ட் அடித்து தங்கினார.

சரியான வளர்ச்சி
ஒருகட்டத்தில் முன்னணி நடிகைகளுக்கு எல்லாம் சவால் விடும் வகையில் உயர்ந்தார் அந்த நடிகை. செம குஷியில் இருந்த நடிகைக்கு திடீரென வாய்ப்புகள் சரிந்தன. நிலைமை அப்படியே தலைகீழாக மாறியது.

தலைகீழாக மாறிய நிலைமை
ஏன் இந்த நிலைமை என யோசித்தவருக்கு, அட்ஜெஸ்ட் செய்வதில் இருந்த பிரச்சினை தான் காரணம் என்றனர் அவருக்கு நெருக்கமானவர்கள். இதையடுத்து அதற்கும் தயாரானார் அந்த நடிகை. ஆனால் அதற்குள்ளாக அவரது இடத்துக்கு வேறு சிலர் வந்துவிட்டனர்.

படங்கள் இல்லை
இதனால் நடிகைக்கு தொடர்ந்து படங்கள் கிடைப்பது சிக்கலாக மாறியது. உடன் நடித்த ஹீரோக்களுக்கு மறைமுகமாகவும், நேரடியாகவும் தூதுவிட்டு பார்த்தார். ஆனால் ஒன்றும் வேலைக்கு ஆகவில்லை.

மீண்டும் சொந்த ஊர்
இதையடுத்து சொந்த ஊருக்கு மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு சென்றுவிட்டார். பிழைக்க போன ஊர் கைவிட்டாலும், சொந்த ஊர் கைவிடாது என நம்பிக்கையாக இருந்தார் நடிகை. ஆனால் அங்கும் ஏமாற்றமே மிஞ்சியது.

அதிரடி
சின்ன சின்ன வேடங்கள் மட்டுமே அவரை தேடி வருகிறதாம். ஆனால் அவருக்கு அதில் நடிக்க மனமில்லை. டிவி பக்கம் தலைகாட்டலாம் என்று முடிவு செய்திருக்கிறாராம். ஒருவேளை அதுவும் சரியாக அமையவில்லை என்றால், திருமணம் செய்துகொண்டு சினிமாவில் இருந்து முழுவதுமாக விலகிவிடலாம் என்ற முடிவில் இருக்கிறாராம் நடிகை. பாவம் பிழைக்க தெரியாத பிள்ளை என வருத்தப்படுகிறார்கள் கோலிவுட்காரர்கள்.


Click it and Unblock the Notifications











