ஒரே பேச்சு தான்: ஒரு விரலை ஆட்டி அலற வைக்கும் நடிகை
Recommended Video

கோலிவுட் கிசுகிசுக்கள் - வீடியோ
சென்னை: இளம் நடிகை ஒருவர் ஒரு விரலை காட்டி தயாரிப்பாளர்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறாராம்.
இளம் நடிகை ஒருவர் நடிப்பில் வெளியான படத்திற்கு அமோக ஆதரவு கிடைத்துள்ளது. அவர் பெரிதும் எதிர்பார்த்த படம் ஊத்திக் கொண்ட நிலையில் இந்த படம் அவருக்கு கை கொடுத்துள்ளது.

அடுத்ததாக அவர் நடிப்பில் வித்தியாசமான படங்கள் தயாராகிக் கொண்டிருக்கிறது. நடிகையின் மார்க்கெட் பிக்கப்பாகி வருகிறது. ஒரு படத்திற்கு ரூ. 1 கோடி சம்பளம் வாங்குகிறார்.
இந்நிலையில் விளம்பர படம் ஒன்றில் நடிக்கவும் ரூ. 1 கோடி கேட்கிறாராம் அம்மணி. படத்திற்கு வாங்கும் அதே சம்பளமா என்று தயாரிப்பாளர்கள் வியக்கிறார்கள்.
நடிகை படம் ஒன்றுக்கு ரூ. 1 கோடி கேட்ட போது தயாரிப்பாளர்கள் கடுப்பானார்கள். ஆனால் தற்போது அவரின் நிலை நன்றாக உள்ளதால் ரூ. 1 கோடி கொடுப்பதில் தயாரிப்பாளர்களுக்கு பிரச்சனை இல்லை.
Comments


Click it and Unblock the Notifications