கடுகு சிறுத்தாலும் காரம் குறையலையே.. வாரிசநடிகர் படத்தில் நடிக்க ஒரு கோடி சம்பளம் கேட்ட வாரிசுநடிகை

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகிகளில் ஒருவராக திகழும் நடிகை ஒருவர் தனது சம்பளத்தை ஒரு கோடி ரூபாயாக உயர்த்தியிருக்கிறார்.

சென்னை: வாரிசு நடிகரின் படத்தில் நடிக்க ஒரு கோடி சம்பளம் கேட்டு ஷாக் கொடுத்திருக்கிறார் பிரபல வாரிசு நடிகை.

முதல் படம் தோல்வியடைந்த போதும், இரண்டாவது படத்தில் ராசியான நடிகை எனப் பேர் பெற்றவர் இந்த வாரிசு நடிகை. கோவில் கட்டாத குறையாக ரசிகர்கள் இவரைக் கொண்டாடினார்கள். ஆனால், அடுத்தடுத்த படங்களில் அவரது அழகு மட்டுமே அவருக்கு கை கொடுக்கவில்லை.

பெரும் எதிர்பார்ப்போடு வெளியான பிரபல இயக்குநர் மற்றும் முன்னணி நடிகருடன் இவர் நடித்த படமும் எதிர்பாராத தோல்வியைத் தழுவியது. இதனால் ராசியில்லாத நடிகை என்றும், நடிக்கவே தெரியவில்லை என்றும் இவரைக் குற்றம் சாட்டினார்கள்.

பாராட்டு வாங்கினார்

பாராட்டு வாங்கினார்

ஆனால், அப்படி பேசியவர்கள் முகத்தில் எல்லாம் கரியைப் பூசும்படி, ஒரு படத்தில் நடித்து பலரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். அந்த ஒரு படத்திற்காகவே அவரை ஆஹோ, ஓஹோவென கொண்டாடினார்கள். அடுத்தடுத்து தமிழின் முன்னணி நாயகர்களுடன் ஜோடி சேரும் வாய்ப்பு கிடைத்தது.

மீண்டும் சரிந்த மார்கெட்

மீண்டும் சரிந்த மார்கெட்

ஆனால் அவற்றிலும் வழக்கம் போல், அழகு பொம்மையாகவே வந்து செல்லும் கேரக்டர். இதனால் மீண்டும் நடிகையின் மார்க்கெட் சரிந்தது. தற்போது சொல்லிக் கொள்ளும் வகையில் கையில் படங்கள் ஏதும் இல்லை. புதிய வாய்ப்புகளைத் தான் அவர் தேடி வருகிறார்.
எடைக்குறைப்பு

உடல் எடைக்குறைப்பு

உடல் எடைக்குறைப்பு

இந்நிலையில் சமீபத்தில் உடல் எடையைக் கணிசமாகக் குறைத்தார் இவர். இதனால் முன்பிருந்த பப்ளி லுக் காணாமல் போனது. சீக்காளி மாதிரி ஆகிவிட்டார் என அவர் காதுபடவே பலர் பேசினர். ஆனாலும், அம்மணி அதைக் கண்டு கொள்வதாக இல்லை.

ரூ.1 கோடி சம்பளம்

ரூ.1 கோடி சம்பளம்

தற்போது அவரை அக்கட தேசத்து சூப்பர்ஸ்டார் மகன் நாயகனாக நடிக்கும் படத்திற்காக தயாரிப்பாளர் அணுகியுள்ளார். அப்போது ஒரு கோடி சம்பளம் கொடுத்தால் மட்டுமே அவருடன் நடிப்பேன் என கறாராக கூறிவிட்டாராம் நடிகை. இதனால் ஷாக் ஆகி விட்டாராம் தயாரிப்பாளர்.கடுகு சிறுத்தாலும் காரம் குறையலையே.. என நடிகையை கோடம்பாக்கத்தில் கலாய்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X