மார்க்கெட்டே இல்ல.. ஆனா இவ்வளவு சம்பளம் கேட்குறாரே.. பிரபல நடிகையை பார்த்து சிரிக்கும் திரையுலகினர்
ஒரு பாடலுக்கு அதிகம் சம்பளம் கேட்கும் நடிகையைப் பார்த்து திரையுலகினர் சிரிக்கின்றனர்.
சென்னை : மார்க்கெட் இல்லாத போதும், கோடியில் சம்பளம் கேட்கிறாரே என பிரபல நடிகை ஒருவரைப் பார்த்து சிரியாய் சிரிக்கிறது கோலிவுட்.
தொடர்ச்சியாக தமிழில் படங்கள் இல்லாவிட்டாலும், அவ்வப்போது படங்களில் தலை காட்டி வருபவர் இந்த இனிப்பான நடிகை. ஓரிரு படங்கள் நடித்தாலும் முன்னணி நடிகர்கள் படமாகத்தான் நடித்து வருகிறார். தற்போதும் கூட முக்கியமான படமொன்றில் நாயகியாக நடித்து வருகிறார்.

இந்த சூழ்நிலையில் தான் முக்கிய நடிகரின் படமொன்றில் பாடல் ஒன்றிற்கு ஆடும் வாய்ப்பு நடிகைக்கு வந்தது. அதில் நடிக்க நடிகை கேட்ட சம்பளம் தான் தயாரிப்பாளரை மயக்கம் போடச் செய்து விட்டது.
ஒரு பாடலுக்கே இவ்வளவு தொகையா? அதற்கு முழு படத்திலும் நடித்துக் கொடுத்து விடலாமே என்பது தான் அவர்களது எண்ணம். ஒருவேளை பட வாய்ப்பை மறுக்கவே நடிகை அவ்வளவு சம்பளம் கேட்டாரோ என்ற சந்தேகம் திரைத்துறையினருக்கு.
இது ஒருபுறம் இருக்க, சரியான படவாய்ப்புகள் இல்லாததாலும், வயது கூடிக் கொண்டே செல்வதாலும் விரைவில் திருமதி ஆக முடிவெடுத்திருக்கிறார் நடிகை. இந்த சூழ்நிலையில் இவ்வளவு சம்பளம் கேட்டிருப்பது திரைத்துறையினருக்கு சிரிப்பைத் தான் வரவழைத்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











