படங்கள் ஹிட்டானாலும் ஒன்றும் பயன் இல்ல.. கூடவே கெட்ட நேரமும் துரத்துதே.. கவலையில் பிரபல நடிகை!
ஹிட் படங்கள் கொடுத்தாலும் புதிய பட வாய்ப்புகள் வரவில்லையே என கவலையில் இருக்கிறாராம் பிரபல நடிகை.
சென்னை: தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக உள்ள ஒருவருக்கு, படங்கள் ஹிட்டானாலும் கெட்ட நேரம் தலைவிரித்தாடுவதாக கூறப்படுகிறது.
அக்கட தேசத்தில் நிறைய படங்களில் நடித்து வந்தவர் அந்த நடிகை. சொந்த மொழி படங்கள் மட்டுமல்லாது பிற மொழி சினிமாவிலும் கலக்கி வந்தார்.

அவரை தமிழுக்கு அழைத்து வந்தார் அரசியல் பேசும் பிரபல இயக்குனர் ஒருவர். ஹீரோவும் பெரிய ஆள் தான். முதல் படமே சூப்பர் ஹிட் என்பதால் நடிகை குஷியானார்.
இதையடுத்து அவரை பல தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் அணுகினர். எக்கச்சக்கமாக சம்பளம் கேட்டது மட்டுமல்லாமல். ஓவராக சீனும் போட்டதால் வந்த படங்களும் கையைவிட்டு போய்விட்டன.
ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழில் படங்கள் கிடைக்க ஆரம்பித்தன. இந்த முறை நடிகையின் ஆட்டம் வேறு மாதிரியாக இருந்தது. தனது நண்பர்களை படப்பிடிப்பு தளத்துக்கே அழைத்து வந்து கூத்தடித்தார். இதனால் மீண்டும் கடுப்பானார்கள் தயாரிப்பாளர்கள்.
இடைவெளி விட்டு நடித்து வந்தாலும் பேர் சொல்லும் படங்களில் நடித்திருக்கிறார். வருடத்திற்கு ஒன்றிரண்டு படங்கள் மட்டுமே வந்து கொண்டிருந்த நிலையில், இந்த ஆண்டு தான் நடிகைக்கு சிறப்பாக அமைந்தது.
வெளியான படங்கள் அனைத்தும் ஹிட்டானதால் இனி நம் காட்டில் அடைமழை பெய்யும் என நம்பியிருந்தார் நடிகை. ஆனால் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஒரு படம் கூட இல்லை. தமிழில் மட்டுமல்ல, பிற மொழிகளிலும் நடிகைக்கு ஒரு படம் கூட இல்லை. ஏற்கனவே கமிட்டான ஒரு வேற்று மொழி படத்தில்கூட அவருக்கு சின்ன ரோல் தானாம்.
இதனால் செம கடுப்பில் இருக்கிறார் நடிகை. தான் இறங்கி வந்து அட்ஜெஸ்ட் செய்தாலும் ஏன் படங்கள் வரமாட்டேங்குது என ரூம் போட்டு யோசித்து வருகிறாராம் நடிகை. என்ன தான் படங்கள் ஹிட்டானாலும் கெட்ட நேரம் ஆரம்பித்துவிட்டால் இப்படி தான் என கூட இருப்பவர்கள் நடிகையிடம் எடுத்து சொல்லி வருகிறார்களாம்.


Click it and Unblock the Notifications











