»   »  அந்தி சாயும் நேரத்தில் பாட்டில் சாய்க்கும் நடிகை!!

அந்தி சாயும் நேரத்தில் பாட்டில் சாய்க்கும் நடிகை!!

Subscribe to Oneindia Tamil


'நெஞ்சாங்கூட்டு' நடிகையும், அவரது அம்மாவும் அந்தி சாயும் நேரங்களில், பாட்டிலும் கையுமாக ஸ்டார் ஹோட்டலில் முகாமிடுகிறார்களாம். கோலிவுட்டில் படு 'ஹாட்'டான செய்தி இதுதான்.

முதல் படத்திலேயே முத்திரை பதித்தவர் இந்த நடிகை. மதுரைக்கார பாஷையில், மதுரைக்கார புள்ளையாகவே மாறிப் போயிருந்தார் இவர்.

ஆனால் அடுத்தடுத்து பெரிய அளவில் வாய்ப்புகள் வரவில்லை, விரல் நடிகருடன் நடித்த படத்திற்காக நிறைய காலம் எடுத்துக் கொண்டு விட்டதால், இடைப்பட்ட காலத்தில் சும்மா இருக்கும் நிலை ஏற்பட்டு விட்டது.

அதன் பிறகு சண்டை என்று பொருள் வரும் டைட்டில் கொண்ட படத்தில் முற்றிலும் வித்தியாசமாக நடித்து கலக்கினார். இப்படமும் அவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது.

பிறகு மதுரை பக்கத்தை கதையாகக் கொண்ட மேலும் இரு படங்களில் நடித்து பெயர் வாங்கினார். இப்போது அவர் கையில் சுத்தமாக படம் இல்லாத நிலையாம். தாய் மொழியான மலையாளத்திலும் கூட முயற்சித்துப் பார்த்தார். ஆனாலும் ஒன்றும் தேறவில்லையாம்.

இதனால் மன வருத்தத்தில் இருக்கும் அந்த அந்தி நடிகைக்கு இப்போது பெறும் ஆறுதலே அவரது அம்மாதானாம். அவர் ஒரு ப்யூட்டிஷியன். மகளை அழகாக வைத்துக் கொள்ளத் தெரிந்த அம்மாவுக்கு, அழாமல் இருக்கவும் வழி தெரியாதா என்ன.

மகளின் மனச் சோர்வைப் போக்க அம்மா கூட்டிப் போன இடம் ப்யூட்டி பார்லர் அல்ல, மாறாக ப்யூட்டிஃபுல் பார்களில் நடக்கும் மது விருந்துகளுக்கு. இந்த டீலிங் மகளுக்கும் பிடித்துப் போகவே இப்போதெல்லாம் ரெகுலராக மது விருந்துகளுக்கு இருவரும் போய் விடுகிறார்களாம்.

கையில் பாட்டிலும், நெஞ்சில் சந்தோஷமுமாக இருவரும் நேரம் போவதே தெரியாமல் எதிரும் புதிருமாக அமர்ந்து உற்சாகத்தை உள்ளே அனுப்புகிறார்களாம். இதுவரை இருவருமே எல்லை மீறி நடந்து கொண்டதாக புகார் எதுவும் இல்லையாம்.

ஆனால் இந்தப் புதுப் பழக்கம் அப்பாவுக்குப் பிடிக்கவில்லையாம். இருந்தாலும் மகளையும், குறிப்பாக மனைவியின் பேச்சைத் தட்ட முடியாத நிலையில் அவர் இருக்கிறாராம்.

இப்படித்தான் ஒரு அப்பா, தப்பாகப் போகாதீங்க என்று மகளையும், மனைவியையும் கண்டித்தார். கடைசியில் அவரே தனியாக போக வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது. அப்பாவை அனுப்பி வைத்த பின்னர் மகள் படு வேகமாக சினிமாவில் முன்னேறினார். இன்று அவர் இருக்கும் ரேஞ்ச் அத்தனை பேருக்கும் தெரியும். மகளைப் போலவே அம்மாவுக்கும் நல்ல செல்வாக்குதான்.

அதே பாதையில் அந்தி நடிகையும் போவாரா என்பதுதான் கோலிவுட்டின் எதிர்பார்ப்பு.

Read more about: kollywood, sandhya, star hotel, trisha

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil