நடிகையின் குட்டு உடைந்ததால் தமிழ் பெண்ணுக்கு டைட்டிலா?
சென்னை: வட நாட்டு நடிகையின் குட்டு உடைந்ததால் அவருக்கு பெரிய முதலாளி டைட்டிலை அளிக்கவில்லையோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
பெரிய முதலாளி நிகழ்ச்சி ஒரு வழியாக முடிந்து விட்டது. பெரிய முதலாளி வீட்டில் இருந்தவர்களில் அந்த வட நாட்டு நடிகை தான் ரொம்ப கோபக்காரியாக இருந்தார்.
சக போட்டியாளர்களை மரியாதை இல்லாமல் பேசினார்.

பெரிய முதலாளி
அந்த நடிகை என்ன செய்தாலும் பெரிய முதலாளி ஆதரித்தார். அவருக்காக பார்வையாளர்களின் ஓட்டுகளை தூக்கி குப்பையில் போட்டு அவர்களை பகைத்துக் கொண்டார். கள்ள ஓட்டுகள் போட்டதுடன் இல்லாமல் அது தான் உண்மை என்று ஆண்டவரையே சொல்ல வைத்துவிட்டார் பெரிய முதலாளி.

நடிகை
தமிழ் பெண்ணுக்கு பார்வையாளர்கள் அதிக அளவில் ஓட்டு போட்டனர். இருப்பினும் பெரிய முதலாளி கடைசி நேரத்தில் ஏதாவது செய்து அந்த வட நாட்டு நடிகை வெற்றி பெற்றதாக அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இம்முறை ஓட்டுகளில் கை வைக்காமல் நம்ம தமிழ் பெண்ணுக்கே டைட்டிலை கொடுத்துவிட்டனர்.

குட்டு உடைந்தது
வட நாட்டு நடிகை பெரிய முதலாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள குறுக்கு வழியில் சென்றது நேற்று தெரிய வந்தது. மேலும் அவருக்கு குற்றப் பின்னணி உள்ள நபருடன் நெருங்கிய தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது. வெற்றியாளரை அறிவிக்கும் நாள் அன்று நடிகையின் குட்டு உடைந்துவிட்டது. ஒரு வேளை இதனால் தானோ என்னவோ தமிழ் பெண்ணுக்கு டைட்டிலை கொடுத்துவிட்டனர்.

பகை
பெரிய முதலாளி வீட்டில் இருந்த போது பார்வையாளர்களின் கோபத்திற்கு ஆளானார் அந்த நடிகை. தற்போது அவர் எப்படி அந்த வீட்டிற்கு சென்றார் என்ற விபரம் வேறு தெரிந்து விட்டது. நல்ல பெயர் எடுத்த சேச்சியின் கெரியரே ஒன்றும் பெரிதாக பிக்கப் ஆகவில்லை. இந்நிலையில் இந்த நடிகையின் நிலை என்னவாகப் போகிறதோ?


Click it and Unblock the Notifications











