சினிமாவில் இருந்து ஒதுக்கப்பட்ட பிரம்மாண்ட வாரிசு.. திருமணத்துக்கு மாப்பிள்ளையை தேடும் அப்பா?

By Staff

சென்னை: வசதியான பள்ளி, கல்லூரி என படிக்க வைத்து வேறு துறையில் சிறந்து வழங்க வேண்டும் என பார்த்து பார்த்து அப்பா பல விஷயங்களை செய்தாலும், ஊறும் பிளட் 1000 வாலா என அப்பாவின் ரத்தம் என்பதால் நானும் சினிமாவுக்கு வரேன் என அடம்பித்த வாரிசு நடிகையை அதற்குள் சினிமா ஒதுக்கிவிட்டது பெரிய கஷ்டத்தை ஏற்படுத்தி விட்டதாக கூறுகின்றனர்.

ஆரம்பத்தில் பார்த்து பார்த்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்க வைத்த அப்பாவும் அதன் பின்னர், இதற்கு மேல் உனக்காக எவனிடமும் போய் நிற்க முடியாது என ஒரே போடாக போட்டுவிட்டார் என்கின்றனர்.

Actress failed to get new movies due to her flops Now his Father try to fix Marriage soon to her

சினிமா வாய்ப்புகள் ஒட்டுமொத்தமாக கை விட்டுச் சென்ற நிலையில், மகளுக்கு திருமணத்தை செய்து வைத்து விட்டால் நம்ம கடமை முடிந்து விடும் என அப்பா தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கிவிட்டதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.

ராசியில்லாமல் போன மகளின் வருகை: சினிமாவில் கொடிகட்டி பறந்துக் கொண்டிருந்த அப்பாவுக்கே மகளின் சினிமா வருகை அதிர்ஷ்டத்தை தராமல் மொத்தத்தையும் புடுங்கி விட்டதாக அவர் ரொம்பவே ஃபீல் பண்ண ஆரம்பித்து விட்டாராம். சினிமா வேண்டாம் என அப்பா எவ்வளவு தடுத்தும் அடம்பிடித்த மகளின் நிலைமை தற்போது ரொம்பவே மோசமாகியுள்ள நிலையில், இதுக்குத்தான் அப்பவே தலையால் அடித்துக் கொண்டேன் என கத்தி விட்டார் என்கின்றனர்.

திருமணத்துக்கு தேடுதல் வேட்டை: ஏற்கனவே ஒருமுறை மகளின் திருமண விஷயத்தில் மாட்டிக்கொண்ட நிலையில், அவசரப்படாமல் நல்ல மாப்பிள்ளையை தேடி வருகிறாராம் அந்த அன்புள்ள அப்பா என கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன. ஆனால், மகள் அவ்வளவு சீக்கிரம் நான் பின் வாங்கிவிட மாட்டேன். என் சொந்த காலில் நின்று வெற்றியை குவித்த பின்னர் தான் திருமண பேச்சையே எடுக்க வேண்டும் என அம்மாவிடம் கட் அண்ட் ரைட்டாக சொல்லிவிட்டார் என்கின்றனர்.

பாவம் அம்மா: அப்பா மற்றும் மகள் கொடுக்கும் டார்ச்சரில் சிக்கிக் கொண்டு அம்மா தான் பாவம் அவஸ்த்தை படுறேன் டா சாரி என்கிற நிலைமையில் அழுது புலம்பி வருகிறார் என்கின்றனர். ஒரு பக்கம் மகள் சினிமா சான்ஸ் வேட்டையில் இறங்க, இன்னொரு பக்கம் அப்பா சுயம்வரத்தை நடத்த திட்டமிட்டு வருவதால் சீக்கிரமே யார் ஜெயிக்கப் போகிறார் என்பது தெரிந்து விடும் என பேச்சுக்கள் புகையத் தொடங்கி உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X