ஃபைனான்சியரை திட்டிவிட்டு சென்னை பக்கம் வரவே பயப்படும் நடிகை!
ஹீரோக்கள்தான் வாயை வைத்துக்கொண்டு சும்மா இல்லாமல் எதையாவது பேசி மாட்டிக்கொள்வது வழக்கம். அந்த லிஸ்ட்டில் ஒரு நடிகையும் சேர்ந்து சென்னை பக்கமே வரக்கூட முடியாமல் தவிக்கிறாராம்.
சமீபத்தில் நடந்த ஃபைனான்சியர் வழக்கு விவகாரத்தில் பெரிய ஹீரோக்களே வாயைத் திறக்காமல் இருக்க, அந்த பூர்ணமான நடிகை ஃபைனான்சியரை கேவலமாக விமர்சித்து ட்விட் போட்டார். அப்போதே நடிகையை எச்சரித்தனர். ஆனால் அவரோ 'நான் உண்மையை தானே சொன்னேன்' என்று சமாளித்தார்.

ஆனால் சம்பந்தப்பட்ட இயக்குநர் கம் நடிகரே ஃபைனான்சியருடன் சமாதானமாக்ப போய்விட்டார்.
இப்போது ஃபைனான்சியரின் வெயிட்டை தெரிந்துகொண்ட நடிகை சென்னை பக்கம் வரவே பயப்படுகிறாராம். போலீசுக்கே தண்ணி காட்டுபவர் நம்மை என்ன செய்வாரோ என்ற அச்சம் தானாம்.
நடித்த படமும் சுமாராகக் கூட போகவில்லை. தமிழுக்கே மூட்டை கட்டிவிட வேண்டியதுதான் போல என புலம்புகிறாராம்.


Click it and Unblock the Notifications











