கர்மா.. 2 முறை கருக்கலைப்பு செய்ததால் வந்த வினை.. இப்போ கல்யாணத்துக்குப் பிறகு கஷ்டப்படும் நடிகை?

By Staff

சினிமாவில் நடிக்க ஆரம்பித்த காலத்தில் சீக்கிரமே டாப் நடிகையாக வேண்டும் என ஏகப்பட்ட அட்ஜெஸ்ட்மெண்ட்களை செய்த அந்த ஒல்லி நடிகை திருமணம் ஆகி 2 ஆண்டுகள் ஆகியும் இன்னமும் கரு தங்க மாட்டேங்குதே என ரொம்பவே மனக்கஷ்டத்தில் புலம்பி வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

திரையுலகில் கண்ணியமாக நடித்து திருமணத்தையும் கால காலத்தில் செய்துக் கொண்டு குழந்தைகளை பெற்றுக் கொண்டு அவர்களை வளர்த்து பெரியவர்களாக்கும் பல நடிகைகள் உள்ளனர். அதே நேரத்தில் ஏகப்பட்ட பிரேக்கப்புகள், அட்ஜெஸ்ட்மெண்ட்டுகள் என செய்துக் கொண்டு திருமணம் ஆகும் முன்பே பல தகாத உறவுகளை வைத்துக் கொண்டு ஒரு கட்டத்தில் சோஷியல் ஸ்டேட்டஸ்க்காக திருமணம் செய்துக் கொள்ளும் ஒரு சில நடிகைகள் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர்.

Actress feels so bad for not getting pregnant after 2 years of marriage due to her past bad things

கர்மா இஸ் பூமரங் என்பது போல தற்போது அந்த பிரபல ஒல்லி நடிகை திருமணத்துக்குப் பிறகு குழந்தை பெற்றுக் கொள்ள முடியவில்லையே என போகாத கோயில்கள் இல்லையாம், பார்க்காத டாக்டர்கள் இல்லையாம் என்று கிசுகிசுக்கள் கிளம்பியுள்ளன.

அரசியல் பிரபலத்திடம் அந்தரங்க தொடர்பு: போதைப் பொருள் புழக்கம் விவகாரத்தில் சிக்கிய ஒல்லி நடிகையை அரசியல் பிரபலம் ஒருவர் காப்பாற்றிய நிலையில், அவருக்கு நன்றிக் கடனாக அவருடன் சில மாதங்கள் யாருக்கும் தெரியாமல் ரகசிய வாழ்க்கையை அந்த ஒல்லி நடிகை வாழ்ந்து வந்தார் என்கின்றனர். ஒரு கட்டத்தில் அதுவே அவருக்கு பிரச்னையாக முடிய அந்த தொடர்பில் இருந்து வெளியேறி சினிமா தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்துக் கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

2 முறை கருக்கலைப்பு: அரசியல் பிரபலத்துடன் நெருக்கமான தொடர்பில் நடிகை இருந்து வந்த நிலையில், 2 முறை கருக்கலைப்பு செய்ததாக சர்ச்சைகள் கிளம்பின. ஆனால், அதெல்லாம் கிடையவே கிடையாது என நடிகை மறுத்திருந்தார். இந்நிலையில், திருமணம் ஆன பின்னர், கடந்த 2 ஆண்டுகளாக தனக்கு புதிதாக கரு தங்கமாட்டேன் என்கிற வேதனையில் நடிகை வாடி வருவதாக நெருங்கிய வட்டாரங்கள் மூலம் காத்துவாக்குல இந்த மேட்டர் மீண்டும் புகைய ஆரம்பித்துள்ளது.

சினிமாவுக்கு ரெஸ்ட்: எப்படியாவது குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்கிற குறிக்கோளுடன் நடிகை இருந்து வருவதாகவும் அதன் காரணமாக புதிதாக எந்தவொரு படத்தையும் கடந்த 6 மாத காலமாக அவர் சைன் பண்ணவில்லை என்றும் எப்படியாவது குழந்தை பெற்றுக் கொண்ட பின்னர் தான் மீண்டும் நடிக்க வருவேன் என்கிற முடிவோடு உள்ளார் என்றும் அதற்காக பல சிகிச்சைகளையும் அவர் செய்து வருவதாக கூறுகின்றனர். நடிகைக்கும் அந்த அரசியல் புள்ளிக்கும் இருந்த தொடர்பு குறித்து அறிந்தவர்கள் எல்லாமே கர்மா தான் என்றும் அதனால் தான் இப்படி நடிகை தவிக்கிறார் என்றும் நேரம் பார்த்து நடிகையை நோகடித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X