இறங்கி வந்ததால் அசிங்கப்பட்ட நடிகை.. இந்த வயசுல இதெல்லாம் தேவையா.. சிரிக்கும் கோலிவுட்!
இருந்த இடத்தில் இருந்து இறங்கி வந்ததால் பிரபல நடிகை ஒருவர் தேவையில்லாமல் அசிங்கப்பட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
Recommended Video
சென்னை: காலம் கடந்து தமிழில் நடிக்க வந்ததால் எதிர்பார்த்த பெயர் கிடைக்காமல் ஏமாற்றமடைந்துள்ளார் பிரபல நடிகை ஒருவர்.
தமிழ் நன்கு அறிந்தவர் தான் இந்த நடிகை. ஆனாலும் சொந்த ஊர் கைவிரித்ததால் வடக்கில் தஞ்சம் அடைந்தார். அவர் எதிர்பார்க்காத அளவுக்கு அங்கு வாய்ப்புகள் கொட்டின. இதனால் முன்னணி நடிகையானார்.
தன்னை வேண்டாம் என்று ஒதுக்கிய தமிழ் படங்களில் நடிப்பதில்லை என அதிரடி முடிவெடுத்தார் நடிகை. ஆனால் பாலிவுட் நடிகைகளுக்கு தமிழில் எப்போதுமே வான்டட் அதிகமாக இருக்கும். தமிழும் தெரிந்தால் சும்மா விடுவார்களா என்ன.

நடிகை மசியவில்லை
நடிகையை எப்படியாவது தனது படத்தில் நடிக்க வைத்துவிட வேண்டும் என பல நடிகர்கள் முயற்சித்தனர். ஆனால் நடிகை மசியவில்லை. பல முன்னணி நடிகர்களின் படங்களைக் கூட அசால்ட்டாக மறுத்துவிட்டார்.

பேச்சை தட்ட முடியவில்லை
இந்த சூழ்நிலையில் தான் பாலிவுட் தயாரிப்பாளர் தமிழில் முன்னணி நடிகரை வைத்து படம் எடுக்கும் வேலைகளில் இறங்கினார். எனவே அவர் பேச்சை மறுக்க முடியாமல் நடிகையும் தமிழுக்கு வந்தார். சின்ன கதாபாத்திரம் தான் என்றாலும், அழுத்தமான ரோல் எனக்கூறி நடிகையை சம்மதிக்கவைத்தனர்.

நடிகையின் தப்புக்கணக்கு
ஆனால் அப்படம் அவருக்கு பெரிய பெயர் எதையும் பெற்றுத்தரவில்லை. ஒரு படம் நடித்தாலும் தமிழ் ரசிகர்களை இன்னும் ஏங்க வைக்கலாம் என நடிகை தப்புக்கணக்கு போட்டுவிட்டார். அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

நடிகையின் உடல்வாகு
தமிழ் ரசிகர்கள் எதிர்பார்த்தப்படி அவரை கொண்டாடவில்லை. அதற்கு முக்கிய காரணம் நடிகையின் உடல்வாகும் தான். பப்ளியான நடிகைகளை தமிழ் ரசிகர்களுக்கு பிடிக்கும் தான். ஆனால் நடிகை சற்று உடல்பருமன் அதிகமாகவே இருந்ததால் அடுத்ததாக சொல்லிக்கொள்ளும்படி அவருக்கு படவாய்ப்புகள் எதுவும் வரவில்லை.

பெருத்த ஏமாற்றம்
இந்த நடிகை தான் வேண்டும் என அடம்பிடித்த சில நடிகர்களும் கூட வேறு சில இளம் நடிகைகள் பக்கம் கவனத்தை திருப்பிவிட்டனர். இதனால் நடிகைக்கு பெருத்த ஏமாற்றமே பரிசாக கிடைத்துள்ளது.

சிரிக்கும் கோலிவுட்
இந்த ஒரு படத்திலும் நடிக்காமல் இருந்திருந்தால் பழைய மாதிரி கெத்து காட்டியே காலத்தை ஓட்டியிருக்கலாம். இப்படி இறங்கி வந்தும் அதற்கு பயன் இல்லாமல் போய்விட்டதே. இதற்கு தான் காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ள வேண்டும் எனக் கூறி சிரிக்கிறார்கள் கோடம்பாக்கத்தினர்.


Click it and Unblock the Notifications