»   »  நம்பர் நடிகையின் காதலர் நல்லா கிளப்புறாருய்யா வதந்திய!

நம்பர் நடிகையின் காதலர் நல்லா கிளப்புறாருய்யா வதந்திய!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நம்பர் நடிகையின் வருங்கால கணவர் தங்களை பற்றி வதந்திகளை பரப்பிவிடுவதில் வல்லவராக உள்ளார்.

நம்பர் நடிகைக்கும் தெலுங்கு நடிகருக்கும் தான் பல காலமாக காதலாக இருந்தது. இந்த காதல் அண்மையில் தான் முறிந்து போனது. நடிகையின் காதல் முறிந்த கையோடு அவரது அடுத்த காதல் மற்றும் திருமண செய்தி தீயாக பரவியது.

Actress' fiance is good in spreading rumours

நடிகைக்கும், சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபருக்கும் விரைவில் திருமணம் என்ற செய்தி தான் காட்டூத்தீயாக பரவியது. இந்த செய்தியை நடிகையும், அவரது அம்மாவும் தொடர்ந்து மறுத்து வந்தனர். அவர்கள் செய்த புலன் விசாரணையில் இப்படியொரு செய்தியை பரப்பிவிட்டதே அந்த தொழில் அதிபர் தான் என்பது தெரிய வந்தது.

ஆனால் தற்போது நடிகைக்கும், அந்த தொழில் அதிபருக்கும் இந்த வாரம் நிச்சயதார்த்தம் நடக்க உள்ளது. நிச்சயதார்த்த பரிசாக அவர் நடிகைக்கு விலை உயர்ந்த காரை பரிசளிப்பதாக ஊரெல்லாம் பேச்சாக கிடந்தது. இந்த தகவலை யாருடா பரப்பியது என்று விசாரணை செய்தவர்களுக்கும் மீண்டும் அதிர்ச்சி. காரணம் கார் செய்தியை பரப்பிவிட்டதும் நடிகையின் வருங்கால கணவர் தானாம்.

அவரே நடிகை மற்றும் தான் சம்பந்தப்பட்ட வதந்திகளை பரப்பி வருகிறார். கார் செய்தியை பரப்பிவிட்ட அவர் தற்போது அதை மறுத்துள்ளார். தான் நடிகைக்கு காரை பரிசாக அளிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

English summary
Number actress' fiance is very good in spreading rumours about them.
Please Wait while comments are loading...