“உடம்பை காட்டுனா கொட்டித் தர்றீங்க, திறமையை மதிக்க மாட்டேங்குறீங்களே”.. கோபத்தில் வாரிசு நடிகை!
கேட்ட சம்பளத்தை தர மறுப்பதால் தயாரிப்பாளர்கள் மீது கோபத்தில் இருக்கிறார் வாரிசு நடிகை.
சென்னை: சினிமாவில் உடம்பைக் காட்டும் நடிகைகளுக்கு கொட்டித் தரும் தயாரிப்பாளர்கள், திறமையான நடிகைகளை மதிப்பதில்லை என ஆவேசமாகி இருக்கிறாராம் வாரிசு நடிகை.
நாயகியாக தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நடிகைக்கு, அப்பாவைப் போலவே வில்லத்தனம் தான் கை கொடுத்துள்ளது. அடுத்தடுத்து அவர் வில்லியாக மிரட்டிய இரண்டு படங்கள் ஹிட்டடித்தது. அப்படங்களில் அவரது நடிப்புய்ம் பெரிதும் பேசப்பட்டது.

இதனால் தனது சம்பளத்தை கணிசமாக உயர்த்தினார் நடிகை. ஆனால், புதிய சம்பளத்தைக் கேட்டு புதிதாக ஒப்பந்தம் செய்ய வரும் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி அடைகிறார்களாம். அதோடு நடிகைக்கு பதில் வேறு யாரையாவது நடிக்க வைக்கலாமா என அவர்கள் ஆலோசனையும் செய்கிறார்களாம்.
இதையெல்லாம் கேட்டு ரொம்பவே வேதனையடைந்துள்ளார் நடிகை. 'அழகுப் பொம்மையாக வந்து கவர்ச்சி மட்டுமே காட்டும் நாயகிகளுக்கு எவ்வளவு சம்பளம் வேண்டுமானாலும் தருகிறார்கள். ஆனால் வில்லியாக ஆக்சன் காட்சிகளில் உடலை வருத்தி நடிக்கும் எங்களைப் போன்றோருக்கு சம்பளம் தர அவர்களுக்கு கசக்கிறதே' என மன வருத்தத்தில் இருக்கிறார் நடிகை.
நடிகையின் ஆதங்கம் உண்மை தான் என்றாலும், என்ன செய்ய நாயகிக்கு இருக்கும் மார்க்கெட் வேற லெவல் ஆச்சே என தங்கள் பக்க நியாயத்தையும் கூறுகிறார்கள் தயாரிப்பாளர்கள்.


Click it and Unblock the Notifications











