பெயர் நாறுது.. ஊரே கண்டிச்சப்போ நீங்க சைலெண்ட்.. இனிமேல் எந்த உறவும் வேண்டாம்.. நடிகரிடமிருந்து விலகும் நடிகை
சென்னை: தமிழ் சினிமாவின் மாஸ் நடிகரான அவர் இப்போது புதிய பயணத்தை ஆரம்பித்திருக்கிறார். அந்த பயணத்தில் கடுமையான விமர்சனங்களை சந்தித்துவருகிறார். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க நடிகரை விமர்சிக்கிறேன் என்கிற பெயரில் நடிகையின் பெயரையும் இழுத்து பலர் பேச; அம்மணி செம டென்ஷனாகிவிட்டார். இந்நிலையில் நடிகை அதிரடியான ஒரு முடிவை எடுத்திருப்பதாக கோலிவுட்டில் குரல்கள் கேட்க ஆரம்பித்திருக்கின்றன.
கோலிவுட்டின் மாஸ் ஹீரோ என்று பெயர் எடுத்தவர் அந்த ஆறெழுத்து நடிகர். ஏகப்பட்ட ஹிட் படங்களை கொடுத்த அவர்; அதிக வசூல் செய்யும் கதாநாயகராக ஜொலித்துக்கொண்டிருக்கிறார். ஆனால் அவர் இப்போது அனைத்தையும் உதறி தள்ளிவிட்டு புதிய பயணத்தை ஆரம்பித்திருக்கிறார். கடந்த சில வருடங்களாகவே இந்தப் பயணத்தில் இருக்கும் அவரை; எதிர் தரப்பினர் கடுமையாக விமர்சித்து அட்டாக் செய்துவருகிறார்கள்.
மனைவி போட்ட சண்டை: இதற்கிடையே நடிகரின் குடும்ப பிரச்னை எல்லை மீறி போய்க்கொண்டிருக்கிறது. ஒரு நடிகையுடன் அவருக்கு கடந்த பல வருடங்களாகவே தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. முக்கியமாக நடிகரின் மனைவி அவரிடம் சரியான சண்டை போட்டு இனிமேல் அந்த நடிகையுடன் நடிக்க கூடாது என ரூல் போட்டதால்தான் இடையில் இரண்டு பேரும் சேர்ந்து நடிக்காமல் இருந்தார்கள். ஆனால் திடீரென சில வருடங்களுக்கு முன்பு மீண்டும் சேர்ந்து நடித்தார்கள்.

பேட்ச் அப் ஆன ஜோடி?: அப்போது இரண்டு பேருக்கும் பழைய தீ மீண்டும் பற்றிக்கொண்டதாம். ஜோடியாக ஊர் சுற்றுவது, ஒரே ஏரியாவில் வீடு வாங்குவது என மும்முரமாக இருந்தார்களாம். இதை பார்த்த மனைவியோ நடிகரிடம் மீண்டும் கடுமையான சண்டை போட்டுவிட்டு பிரிந்துவிட்டதாக பேச்சுக்கள் கேட்கின்றன. இதையெல்லாம் இழுத்து நடிகரின் புதிய பயணத்தில் அவரது எதிரிகள் சரமாரியாக தாக்கிவருகிறார்கள்.
நடிகையின் பெயர்: குறிப்பாக நடிகையின் பெயரை அடிக்கடி எல்லோரும் இழுக்கிறார்கள். இப்படி தொடர்ந்து தன்னுடைய பெயர் இதில் இழுக்கப்படுவதை அம்மணி சுத்தமாக விரும்பவில்லை. நடிகையின் அம்மாவும் இத்தனை நாட்கள் இதனை கண்டும் காணாமல்தான் இருந்திருக்கிறார். சமீபமாக சில விஷயங்கள் எல்லை மீறி போவதால் அம்மணி ஒரு முடிவு எடுத்திருக்கிறாராம்.
என்ன முடிவு?: அதாவது இனிமேல் நடிகரோடு ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்ற முடிவுதானாம் அது. இதற்கு இன்னொரு முக்கிய காரணமும் இருக்கிறதாம். தன்னுடைய பெயரை இழுத்து அசிங்கமாக பேசியவரை ஊரே கண்டித்தது. நடிகரும் குரல் கொடுப்பார் என்று அம்மணி எதிர்பார்த்தாராம். நடிகரோ வழக்கம் போல் சைலெண்ட் மோடில் இருந்ததால் பெரிய அப்செட் ஆகிவிட்டாராம் நடிகை. இனியும் உங்களுடன் இருந்தால் மேற்கொண்டு பெயர் நாறிவிடும்; இனிமேல் எந்த தொடர்பும் வேண்டாம் என்று ஃபோன் போட்டு சொல்லிவிட்டாராம். இதன் காரணமாக நடிகர் ரொம்பவே சோகமடைந்துவிட்டாராம்.


Click it and Unblock the Notifications











