ஒரு படத்துக்கேவா?: நடிகையை பார்த்து விழுந்து விழுந்து சிரிக்கும் திரையுலகம்
சென்னை: ஒரு படத்தில் வெயிட்டான கதாபாத்திரத்தில் நடித்ததற்கே அழகி நடிகைக்கு கண்ணை கட்டிவிட்டதாம்.
படத்திற்கு படம் வித்தியாசமாக நடிக்க விரும்புகிறார் அந்த அழகி நடிகை. உங்களுக்கு ஹீரோவுடன் டூயட் பாடும் வேலை தான் சரிபட்டு வரும், வெயிட்டான கதாபாத்திரம் எல்லாம் ஒத்து வராது என்கிறார்கள் இயக்குநர்கள்.
இந்நிலையில் தான் ஒரு இயக்குநர் துணிந்து ரிஸ்க் எடுத்து அம்மணியை நம்பி வெயிட்டான கதாபாத்திரம் கொடுத்தார்.

மகிழ்ச்சி
அம்மணியும் வித்தியாசமான கதாபாத்திரம் கிடைத்துவிட்டது என்ற குஷியில் நடித்தார். ஆனால் படம் வந்த இடம் தெரியாமல் பப்படம் ஆகிவிட்டது. நடிகையின் நடிப்பை பார்த்து அவரின் ரசிகர்களே மரணமாக கலாய்த்தனர். இந்நிலையில் அந்த சவாலான கதாபாத்திரமாகவே மாறியதால் தனது குணம் மாறிவிட்டதாக கூறுகிறார் நடிகை.

கஷ்டம்
அந்த வில்லங்கமான கதாபாத்திரத்தில் இருந்து வெளியே வர தியானம் செய்தேன். அதன் பிறகே மனது அமைதியானது. என்னால் தொடர்ந்து சீரியஸான கதாபாத்திரங்களில் நடிக்க முடியாது. அதனால் தற்போது லைட்டான கதாபாத்திரங்களை தேர்வு செய்கிறேன். சீரியஸ் கதாபாத்திரங்களில் இருந்து பிரேக் தேவைப்படுகிறது என்று நடிகை தெரிவித்துள்ளார்.

நடிகை
ஒரு படத்தில் வெயிட்டான கதாபாத்திரத்தில் நடித்ததற்கே கண்ணை கட்டிவிட்டதா என்று திரையுலகினர் சிரிக்கிறார்கள். உங்களுக்கு ஹீரோவுடன் மரத்தை சுற்றி சுற்றி வந்து பாட்டு பாடுவது தான் சரிபட்டு வரும். எது வருமோ, அதை மட்டும் செய்யவும் என்கிறார்கள் திரையுலகினர். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் ஒரே மாதிரி தான் நடிக்கப் போகிறீர்கள். அதற்கு இம்புட்டு சீனா என்று நடிகையை சமூக வலைதளங்களில் விமர்சிக்கிறார்கள்.

நடிப்பு
நடிகையும் நம்பர் ஒன் நடிகை போன்று செமயாக நடிக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுகிறார். ஆனால் அவர் என்ன தான் முயற்சி செய்தாலும் அது மட்டும் அவரால் முடியவே இல்லை. இந்த ஆண்டு அம்மணிக்கு மோசமான ஆண்டாக உள்ளது. அவர் ஒரு படத்தை பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கிறார். அதுவும் கைவிட்டால் அவரின் நிலை பாவம்.


Click it and Unblock the Notifications











