»   »  முன்னாள் கணவருக்கு திருமணம்: கதறிக் கதறி அழுத நடிகை

முன்னாள் கணவருக்கு திருமணம்: கதறிக் கதறி அழுத நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனது முன்னாள் கணவருக்கு திருமணம் என்ற செய்தியை கேள்விப்பட்ட இளம் நடிகை கதறி அழுதாராம்.

பிரபல நடிகை ஒருவர் இயக்குனரை காதலித்து திருமணம் செய்தார். பின்னர் ஒத்து வரவில்லை என்று கூறி விவாகரத்து பெற்றார். விவாகரத்திற்கு பிறகு அவர் ரொம்பவே ஜாலியாக இருப்பதாக கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கிறார்கள்.

Actress gets upset

இந்நிலையில் இயக்குனருக்கு இரண்டாம் திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடக்கிறதாம். இது குறித்து படப்பிடிப்பில் இருந்தபோது தான் நடிகைக்கு தெரிய வந்துள்ளது.

தனது முன்னாள் கணவருக்கு திருமணம் என்ற செய்தியை கேட்டதும் அம்மணி கேரவனுக்குள் ஓடிவிட்டாராம். கேரவனுக்குள் அவர் கதறிக் கதறி அழுதாராம்.

அவர் அழும் சப்தம் கேட்டு படக்குழுவினர் விஷயம் தெரியாமல் குழம்பியிருக்கிறார்கள். கேரவனில் இருந்து வெளியே வந்த நடிகையின் கண்களும், முகமும் வீங்கிப் போயிருந்ததாம். அழுது முடித்தவுடன் பேக்கப் செய்துவிட்டு கிளம்பிவிட்டாராம்.

English summary
A young actress has reportedly cried a lot after she heard about her former husband getting married again.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil