“அந்தப் படத்துல அவங்க நடிச்சா நான் நடிக்க மாட்டேன்”.. அழகி நடிகையால் ஜகா வாங்கிய நம்பர் நடிகை!
பிரபல இயக்குநரின் படத்தில் நடிக்க நம்பர் நடிகை மறுத்து விட்டாராம்.
சென்னை: பிரபல நாவல் படமாக்கப்படும் விசயத்தில் தொடர்ந்து கதாபாத்திரங்களுக்கான நடிகர், நடிகைகளைத் தேர்வு செய்யும் வேலையில் இயக்குநர் பிசியாக இருக்கிறார்.
ஏற்கனவே பல முக்கிய கதாபாத்திரங்களில் முன்னணி நடிகர், நடிகைகள் நடிப்பது ஏறக்குறைய உறுதியாகி விட்டது. வில்லியாக அழகி நடிகை நடிக்க இருக்கிறார். இதனை அவரே வெளிப்படையாக தெரிவித்தும் விட்டார்.

இந்நிலையில் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக பெரிய நம்பர் நடிகையை படக்குழு அணுகியுள்ளது. ஆனால் நடிகை கறாராக நோ சொல்லி விட்டாராம். காரணம் அழகி நடிகை தான் என்கிறார்கள்.
இந்த இயக்குநர் படத்தில் நடிக்க எல்லோரும் போட்டி போட்டு வரும் சூழலில், கிடைத்த வாய்ப்பை ஏன் மறுக்கிறார் என அவரது நலம் விரும்பிகள் ஆச்சர்யம் அடைந்துள்ளனர். இருவருக்கும் இடையே அப்படி என்ன லடாய் என்பது தெரியவில்லை.
ஒரு வேளை நாடறிந்த அழகி நடிகையுடன் நடித்தால், தனது மார்க்கெட் இறங்கி விடும் என பயப்படுகிறாரா நம்பர் நடிகை எனத் தெரியவில்லை.


Click it and Unblock the Notifications











