நள்ளிரவில் நடுக்கடல் பார்ட்டி...சொகுசு கப்பலில் ஜில்... ஹீரோயின்களின் லேட்டஸ்ட் அடிக்ஷன் இதுதானாம்!
சென்னை: விதவிதமான பார்ட்டிகளை கண்ட ஹீரோயின்களின் லேட்டஸ்ட் அடிக்ஷன், சொகுசு கப்பல் பார்ட்டி என்கிறார்கள்.
பகலில் படப்பிடிப்பில் கலந்துகொள்ளும் ஹீரோயின்கள், இரவில் பார்ட்டிகளில் கலந்துகொள்வது சினிமாவில் சகஜமான ஒன்று.
சில நட்சத்திர ஓட்டல்களில் ஸ்டார்களுக்கு என்றே ஸ்பெஷல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வீக்கெண்ட் பார்ட்டி
சினிமாவில் இது புதிது இல்லை என்றாலும் நள்ளிரவு வரை போதையில் தள்ளாடி விட்டு, காலையில் ஷூட்டிங்குக்கு நடிகைகள் தாமதமாக வருவதும் நடக்கிறது என்கிறார்கள். இது தினமும் நடப்பது என்றால் வீக்கெண்ட் பார்ட்டி, வேற லெவலில் இருக்குமாம். சில நேரம் அந்த பார்ட்டி, விடிய விடிய போகும் என்கிறார்கள்.

மட்டையாகும் நடிகைகள்
நட்சத்திர ஓட்டல் பார்ட்டிகள் போரடித்து விட்டதால், இப்போது கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சில நடிகைகளின் வீட்டில் நடக்கிறதாம் ஸ்பெஷல் பார்ட்டி! டான்ஸ், பாட்டு என்று விடிய விடிய போகும் இந்த பார்டிகளில் குடித்து மட்டையாகும் நடிகைகளை வீடுகளில் டிராப் பண்ணுவதற்கு என்று, ஸ்பெஷல் டிரைவர்களை ஏற்பாடு செய்து விடுவார்கள்.

கடல் பார்ட்டி
சில ஹீரோயின்கள் இதற்கு அடிமையாகி விட்டதாகவும் பார்ட்டி இல்லை என்றால் அவர்களால் முடியாது என்கிற நிலைக்கு வந்துவிட்டதாகவும் சொல்கிறார்கள். இதற்கிடையே இதன் அடுத்தகட்டமாக, கடல் பார்ட்டி நடக்கிறதாம் பாலிவுட்டில். அதாவது கடலில் நிறுத்தப்பட்டிருக்கும் சிறிய வகை சொகுசு கப்பல்களில் நடக்கிறதாம் இந்த பார்ட்டி.

தமிழ், தெலுங்கு
மும்பையின் முக்கிய பகுதியில் இருந்து சிறிய படகில் அழைத்துச் செல்லப்படுவார்களாம் ஹீரோயின்கள். அந்த பார்ட்டியில், பாலிவுட் பிரபலங்கள் மட்டுமின்றி தொழிலதிபர்களும் கலந்து கொள்கிறார்களாம். இந்த பார்ட்டியில் தமிழ், தெலுங்கில் நடித்துவரும் பிரபல நடிகைகளையும் அடிக்கடி பார்க்க முடிகிறது என்கிறார்கள். 'தண்ணி'ல மூழ்காம இருந்தா சரி என்கிறார்கள், ரசிகர்கள்.


Click it and Unblock the Notifications











