நடன இயக்குநருடன் ஓவர் நெருக்கம் காட்டிய நடிகை.. இப்போது தலை தலையா அடித்துக் கொள்கிறாராம்
சென்னை: சினிமாவில் ஆரம்பத்தில் குடும்பப் பாங்கான வேடங்களில் நடித்து, ரசிகர்களின் மனதைக் கொள்ளையடித்த அந்த அக்கட தேசத்து நடிகை, சமீபகாலமாகத் தீவிரக் காதல் வலையில் விழுந்து தவித்து வருவதாகத் திரையுலகில் ஒரு ஹாட் கிசுகிசு உலா வந்து கொண்டிருக்கிறது.
கடந்த சில மாதங்களாகத் தனக்குத் நடனம் சொல்லிக்கொடுத்த அந்தப் பிரபல நடன இயக்குநருடன் (கொரியோகிராஃபர்) நடிகை ஓவர் நெருக்கம் காட்டி வந்தார். ஷூட்டிங் ஸ்பாட், பார்ட்டி, வெளிநாட்டு டூர் என இருவரும் ஜோடியாக வலம் வந்து தங்களது காதலை மறைமுகமாக வெளிப்படுத்தி வந்தனர்.
பணத்தை வாரி இறைத்த நடிகை: காதல் கண்ணை மறைத்ததால், அந்த நடன இயக்குநர் கேட்ட போதெல்லாம் நடிகை லட்சக்கணக்கிலும், கோடிக்கணக்கிலும் பணத்தை வாரி இறைத்ததாகக் கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், அந்த நடன இயக்குநர் படம் இயக்குவதற்கு ஆசைப்பட்டதால், தனக்குத் தெரிந்த பெரிய தயாரிப்பாளர்களிடம் பேசி, அவருக்காகப் பட வாய்ப்புகளையும் வாங்கித் தந்துள்ளார் நடிகை.
"அவர் தான் என் உலகம்" என்று சுற்றி வந்த நடிகை, திரையுலகில் பலரும் எச்சரித்தும் அதைக் காதில் வாங்கவே இல்லையாம். காதலரின் ஆடம்பரச் செலவுகள் அனைத்தையும் நடிகையே முன்னின்று கவனித்துக் கொண்டதாகப் பேச்சு அடிபட்டது.

நிஜ முகத்தைத் தெரிந்துகொண்ட நடிகை: ஆனால், இப்போதுதான் அந்த நடன இயக்குநரின் நிஜ முகம் நடிகைக்குத் தெரிய வந்திருக்கிறதாம். அந்த நபர் நடிகையின் பணத்தையும், செல்வாக்கையும் மட்டுமே குறிவைத்து காதலிப்பது போல நடித்திருக்கிறார். சமீபத்தில், நடிகைக்குத் தெரியாமல் வேறு சில இளம் பெண்களுடனும் அவர் அதே பாணியில் பழகி வந்ததை நடிகை கைகளுமாகப் பிடித்துவிட்டதாகக் கோலிவுட் வட்டாரங்கள் முணுமுணுக்கின்றன. குறிப்பாக அவரது நடனக் குழுவில் இருக்கும் பெண் நடனக் கலைஞர்களிடம் ஓவர் நெருக்கம் காட்டி உள்ளார். இவரது கேரவன் கூத்து கதைகள் வரை நடைக்குத் தெரியவந்துள்ளது.
இதைப்பற்றி நடிகை தட்டிக்கேட்டபோது, அந்த நடன இயக்குநர் கொஞ்சம் கூடக் குற்ற உணர்ச்சி இல்லாமல் நடிகையை ஏளனமாகப் பேசிவிட்டு, 'பிரேக் அப்' செய்துகொண்டு கூலாக விலகிவிட்டாராம்.
பணம், புகழ், சினிமா மார்க்கெட் என அனைத்தையும் அந்த நபருக்காக இழந்துவிட்டு, இப்போது ஏமாந்து நிற்கும நடிகை, "இப்படியா ஒருத்தரை நம்பி ஏமாந்தோம்" என்று நினைத்து தற்போது 'தலை தலையாக அடித்துக் கொண்டு' புலம்பி வருகிறாராம். காதல் என்று வந்துவிட்டாலே நடிகைகள் இப்படித் தங்களது நிதானத்தை இழந்துவிடுகிறார்களே என்று சினிமா வட்டாரத்தில் பரிதாபமாகப் பேசி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications