சம்பளத்தை பலமடங்கு உயர்த்திய சீனியர் நடிகை... அதிர்ச்சியில் தயாரிப்பாளர்கள்!
மாமி நடிகை சம்பளத்தை உயர்த்திவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சென்னை: உச்ச நடிகருடன் ஜோடி சேர்ந்துள்ள மாமி நடிகை, தனது சம்பளத்தை அநியாயத்துக்கு உயர்த்திவிட்டதாக தயாரிப்பாளர்கள் புலம்புகிறார்கள்.
பல ஆண்டுகளாக சினிமாவில் கோலோச்சி நிற்பவர் இந்த சீனியர் நடிகை. ஏதோ அதிர்ஷ்டத்தால் மட்டும் உயர்ந்துவிடவில்லை. துணை நடிகையாக வாழ்க்கையை தொடங்கி, படிப்படியாக முன்னேரி ஹீரோயின் ஆனவர்.
இவர் ஜோடி போட்டு நடிக்காத நடிகர்களே இல்லை. தமிழ் மட்டுமல்ல, பிற மொழிகளிலும் முன்னணி நாயகியாக வலம் வந்தார்.

கல்யாணம்
மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் போதே கல்யாணம் செய்து செட்டிலாக நினைத்தார். ஆனால் அந்த முயற்சிகள் எல்லாமே தோல்வியில் முடிந்தது.

மீண்டும் படங்களில் கவனம்
இதனால் கடுப்பான நடிகை மீண்டும் படங்களில் கவனம் செலுத்த தொடங்கினார். ஆனால் படங்கள் எல்லாம் தொடர் தோல்வியடைந்ததால் மார்க்கெட் டல்லானது.

நாயகிக்கு முக்கியத்துவம்
இதையடுத்து தனக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க துவங்கினார். ஆனால் அதுவும் கைகொடுக்காததால், சம்பளத்தை குறைத்து, மீண்டும் பழைய பாதைக்கு திரும்பினார்.

கதவை தட்டிய அதிர்ஷ்டம்
இந்நிலையில் தான் அவருக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டியிருக்கிறது. உச்ச நட்சத்திரத்தின் படத்தில் கமிட் ஆகும் வாய்ப்பு அவருக்கு கிடைத்து. இதைகெட்டியாக பிடித்துக்கொண்ட அவர், தற்போது டூயட் பாடி நடித்து வருகிறார்.

ஹிட்டான படம்
இதற்கிடையே அவர் நடித்த மற்றொரு படம் செம ஹிட் ஆகியிருக்கிறது. இதனால் படுகுஷியில் இருக்கிறார் நடிகை. கையோடு கையாக தனது சம்பளத்தையும் பல மடங்கு உயர்த்திவிட்டார்.

சம்பள உயர்வு
இதனால் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். நடிகை கேட்கும் சம்பளத்தை கொடுக்கலாமா இல்லை நழுவிக்கொள்ளலாமா என யோசித்துக்கொண்டிருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











