'கவர்ச்சிக்கு நான் ரெடி'.. நேரடிகாயாக களத்தில் இறங்கிய நடிகை.. இயக்குனர்கள், நடிகர்களுக்கு தூது!
நடிகை ஒருவர் கவர்ச்சியாக போட்டோ ஷூட் நடத்தி அதை தெரிந்தவர்கள் மூலம் பிரபல இயக்குனர்கள் மற்றும் நடிகர்களின் பார்க்கு கொண்டு சென்றுள்ளார்.
Recommended Video
சென்னை: நடிகை ஒருவர் தான் எல்லாத்துக்கும் தயார் என மறைமுகமாக சிக்னல் கொடுத்து வருகிறார்.
ஆயுதப் படம் மூலம் தமிழில் நாயகியானவர் இந்த நடிகை. பெரும்பாலும் குடும்பப் பாங்கான வேடங்களிலேயே நடித்து வருகிறார். இயக்குனர்களும் தொடர்ந்து அது போன்ற கதாபாத்திரங்களுக்காகவே நடிகையை அணுகி வருகின்றனர்.

இதனால் ஹீரோவுடன் நடித்தும் கூட நடிகைக்கு பெரிதாக வாய்ப்பு எதுவும் வரவில்லை. அங்கொன்றும், இன்கொன்றுமாகவே படங்கள் அமைந்து வருகின்றன.
இப்படியே போனால் மார்க்கெட் சீக்கிரம் காலியாகிவிடும் என்பதை தெளிவாக உணர்ந்த நடிகை, ஆரம்பத்தில் இருந்தே தானும் கவர்ச்சிக்கு ரெடி என மறைமுகமாக கூறி வந்தார். ஆனாலும் அவரை யாரும் கவர்ச்சி கன்னியாக பார்க்கவில்லை.
இதனால் இனி வாய்மொழி பேச்செல்லாம் வேலைக்கு ஆகாது என அதிரடி களத்தில் இறங்கிவிட்டார். கவர்ச்சியாக போட்டோ ஷூட் நடத்தி அதை தெரிந்தவர்கள் மூலம் பிரபல இயக்குனர்கள் மற்றும் நடிகர்களின் பார்க்கு கொண்டு சென்றுள்ளார். அவரது இந்த முயற்சியாவது கைக்கூடுகிறதா என பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











