சரக்கு போதையில் கணவருக்கு செம அடி.. பிரிய போகும் அடுத்த நட்சத்திர ஜோடி.. வேதனையில் நடிகர்!
சென்னை: தமிழ் சினிமாவில் திறமையான நடிகர் என பெயர் எடுத்தவர் வாட்டசாட்டமான 3 எழுத்து நடிகர். சினிமாவில் எந்தவித பின்புலமும் இல்லாமல் வந்து, தன் திறமையால் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து இன்று முன்னணி நடிகராக இருக்கிறார். ஏழ்மையான குடும்பத்தில் இருந்து தன் உழைப்பை மட்டும் மூலதானமாக வைத்து இன்று தனக்கு என்று சொல்லிக்கொள்ளும் அளவிற்கு சொத்தை வைத்து இருக்கிறார்.
அழகான வாட்டசாட்டமான அந்த 3 எழுத்து நடிகரின் அழகில் மயங்கி பல பெண்கள் அவரை திருமணம் செய்து கொள்ள போட்டி போட்டார்கள். ஆனால், அவர்களை எல்லாம் திருமணம் செய்து கொள்ளாமல், தன்னுடன் நடித்த ஒரு நடிகையை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அந்த நடிகைக்கும் நடிகருக்கும் வயது வித்தியாசம் மிக அதிகமாக இருந்த போதும், காதலுக்கு வயது எல்லாம் ஒரு விஷயமா என இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின் நடிகை நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டார். அதே நேரம் நடிகர் அடுத்தடுத்த படங்களில் படுபிஸியாக இருந்தார். அந்த நேரத்தில் அவர் நடித்த ஒரு படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று அனைவரும் 3 எழுத்து நடிகரை கொண்டாடினார்கள்.

தேவையில்லாத வேலை: அதன் பின் அவர், சில கதைகளை சரியாக தேர்வு செய்யாததால், அடுத்தடுத்து அவர் நடித்த வெளியான படங்கள் அனைத்தும் தோல்வி அடைந்தன. இதனால், நடிகருக்கு படங்கள் எதுவும் இல்லாமல் போனது. அந்த நேரத்தில் தான் 3 எழுத்து நடிகரின் மனைவிக்கு ஐட்டம் பாடல் ஒன்றில் டான்ஸ் ஆட வாய்ப்பு வந்தது. அவர் ஹீரோயினாக நடித்ததற்கு இணையான சம்பளம் ஐட்டம் பாடலுக்கு கிடைத்தால், நடிகையும் பல சமரசங்களை செய்து கவர்ச்சி காட்டி ஆட்டம் போட்டார். இதனால், கணவன் மனைவிக்கு இடையே சண்டை வந்து பின் சரியானது. தற்போது, நடிகருக்கு படங்கள் இல்லாததால், தானே சொந்தமாக ஒரு படத்தை தயாரித்து அதில் ஹீரோவாக நடிக்கலாம் என்று திட்டம் போட்ட நடிகர், மனைவிடம் விஷயத்தை சொல்ல கடுப்பான நடிகை, பட தயாரிப்பு எல்லாம் வேண்டாம். அதில், நஷ்டம் வந்தா என் செய்வது, நல்ல கதையை தேர்வு செய்து நடிக்கிற வேலையை மட்டும் பாருங்க என கோவத்துடன் சொல்லி உள்ளார்.
செம அடி: இதனால், கணவன் மனைவி இடையே தொடர்ந்து வாக்குவாதம் நடந்து வந்துள்ளது. ஒரு நாள் இருவரும் சரக்கு போதையில் இருக்கும் போது வாட்டசாட்டமான 3 எழுத்து நடிகர் மனைவிடம் மீண்டும் படத்தை எடுப்பது பற்றி பேசி இருக்கிறார். அப்போது, நடிகை, இது என்ன உன் அப்பன் வீட்டு பணமா, இல்லை நீ சம்பாதித்த பணமா.. இது என் அப்பா வீட்டு பணம் என்று அவமானப்படுத்தும் வகையில் பேசி உள்ளார். இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகமாகி இருவரும் கடுமையாக சட்டை போட்டுக்கொண்டனர். ஒரு கட்டத்தில் பொருமையை இழந்த நடிகை, கணவர் என்று பார்க்காமல் போதையில் சரமாரியாக அடித்துள்ளார். மனைவி அடித்தத்தை தாங்கி கொள்ள முடியாத அந்த நடிகர், இதை வெளியில் சொல்லக்கூட முடியாமல் வேதனையில் விவகாரத்து செய்யும் முடிவில் இருக்கிறாராம்.


Click it and Unblock the Notifications











