»   »  'அலைபாயும்' இளவரசி!

'அலைபாயும்' இளவரசி!

Subscribe to Oneindia Tamil

'அந்த' நடிகையைப் பற்றி கோலிவுட்டில் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக, கலர் கலராக பலான கிசுகிசுக்கள் கிளம்பி அலையடித்து வருகிறது.

அவரை முதல் படத்தில் பார்த்தவர்கள், அடடா என்ன அழகு, என்ன ஒரு அழகுச் சிரிப்பு என ஆச்சரியப்பட்டனர். இன்னொரு சாவித்ரி, இன்னொரு கே.ஆர்.விஜயா, இன்னொரு பானுமதி என ரசிகர்கள் மத்தியில் அவருக்கு நிறையப் பட்டப் பெயர்களும் கூடவே வந்து சேர்ந்தன.

ஆனால் பில்டப் முடிந்து, பிக்கப் ஆகி ஜெட் வேகம் எடுக்க ஆரம்பித்த பின்னர் அவருடன் சேர்ந்து வதந்திகளும் இறக்கை கட்டிப் பறக்க ஆரம்பித்தன.

ஆரம்பத்தில் இளம் நடிகர் ஒருவருடன் படு நெருக்கமாக கிசுகிசுக்கப்பட்டார். இரண்டு பேரும் சேர்ந்து பாண்டிச்சேரி பக்கம் நிலங்கள் வாங்கியுள்ளனர் என்று கூட கூறப்பட்டது. கல்யாணம் செய்து கொள்ளப் போவதாகவும் கூட கிசுகிசுக்கப்பட்டது.

ஆனால் இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை, பிரிந்து போனார்கள். அதன் பின்னர் இளவரசியைப் பற்றி நிறைய கிசுகிசுக்கள்.

கோலிவுட்டில் இப்போது முக்கியப் புள்ளியாக மாறி விட்ட அந்த வெளிநாட்டு சினிமா புள்ளி ஒருவருடன் இணைத்துப் பேசப்பட்டார். ஆனால் நடிகை அதை மறுத்தார்.

இடையில் ஒரு தொழிலதிபருடன் ஏடாகூடமான கோலத்தில், இருக்கக் கூடாத இடத்தில் இருந்தபோது போலீஸார் அவரை சுற்றி வளைத்து விட்டனர். முக்கியப் புள்ளி ஒருவரின் உதவியை நாடி அவர் மூலம் தப்பித்ததாக கதை கதையாக கோலிவுட்டில் பேசிக் கொண்டார்கள்.

இப்போதெல்லாம் நடிகை, படு பார்ட்டி பறவையாகி விட்டார். தினசரி இரவெல்லாம், சிவந்த விழிகளும், தோய்ந்த வதனமுமாக கிளப் கிளப்பாக போய்க் கொண்டிருக்கிறாராம். கூடவே பாய் பிரண்டுகளும் புடை சூழ பக்கபலமாக சென்று கொண்டிருக்கிறார்களாம்.

ஆனால் அம்மணி இவற்றை நிகழ்த்துவதெல்லாம் சென்னையில் அல்ல, ஹைதராபாத்தில்தானாம். இவரின் இந்த செய்கைகள் வீட்டில் உள்ளவர்களுக்கு தெரிந்திருக்கிறதாம். இருந்தாலும் கட்டுப்படுத்த முடியாமல் கட்டறுந்து போய்க் கொண்டிருக்கிறாராம் இளவரசி.

சட்டுப்புட்டென்று கட்டி வைக்காவிட்டால் பின்னால் ரொம்பக் கஷ்டம் என்று கோலிவுட்டில் அந்த நடிகை குறித்து பரிதாபமாக பேசிக் கொள்கிறார்கள்.

Read more about: gossip

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil