அப்போ என் மார்க்கெட் அவ்ளோதானா.. உச்சநடிகர் படத்தால் வேதனையில் பிரபல நடிகை!
Recommended Video
சென்னை: பெரிய படத்தில் நடித்து வரும் நடிகை, தன்னுடைய மார்க்கெட் அப்படம் சுத்தமாக துடைக்கப்பட போகிறதோ என்ற பயத்தில் இருக்கிறாராம்.
தனது அழகால் பெரிய ஹீரோக்களை சொக்க வைத்த நடிகை அவர். தமிழில், தெலுங்கு, இந்தி சினிமாக்களில் டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு வருகிறார்.
ஒருகாலத்தில் நடிகையின் கையில் கை நிறையப் படங்கள் இருந்தன. தமிழ் ஹீரோக்களும், தெலுங்கு ஹீரோக்களும் போட்டி போட்டு நடிகையை தங்கள் படங்களில் புக் செய்தனர்.

ஜாக்பாட் வாய்ப்பு
ஆனால் திடீரென நடிகையின் மார்க்கெட் சரிந்தது. பெயரில் இனிப்பு இருந்தாலும், வாழ்க்கை கசப்பாக மாறியது அவருக்கு. இதனால் விரக்தி அடைந்திருந்த அவருக்கு, ஜாக்பாட் போல் ஒரு வாய்ப்பு வந்தது.
டாப் ஹீரோ, பிரமாண்ட இயக்குனர் ஆகியோருடன் வேலை செய்யும் குஷியில் இருந்தார் நடிகை. அதில் தன்னுடைய கதாபாத்திரம் மிக அழுத்தமானது என்பதால். சரிந்த மார்க்கெட்டை மீண்டும் நிமிர்த்திவிடலாம் என நம்பிக்கையாக இருந்தார்.

மார்க்கெட் காலி
ஆனால் காற்று வாக்கில் காதில் விழுந்த செய்தி ஒன்று அவரது நம்பிக்கையை சுக்கு நூறாக உடைத்தெறிந்திருக்கிறது. அதாவது தற்போது நடித்து வரும் ஹீரோவுடன், எந்த நடிகை நடித்தாலும், அவரது மார்க்கெட் உடனடியாக காலியாகிவிடும் என்பது தானாம் அது.

உதாரணம்
இலங்கை பாஷை படத்தில் நடித்த ஜோதி மயமான நடிகை, பல வேட படத்தில் நடித்த பிசின் நடிகை, டாக்டர் படத்தில் நடித்த சிநேகமான நடிகை, தந்திரமான படத்தில் நடித்த ரன் நடிகை, ரூபம் படத்தில் நடித்த ரியா நடிகை என பல பேரை உதாரணமாக கூறியிருக்கிறார்கள். அவர்கள் சொன்னதை எல்லாம் கூர்ந்து ஆய்வு செய்த நடிகை குழப்பத்தின் உச்சிக்கே சென்றுவிட்டாராம்.

அவஸ்தை
இழந்த மார்க்கெட்டை மீண்டும் பிடித்து விடலாம் என்ற நம்பிக்கையில் இருந்த நாயகிக்கு இந்த செய்தி தலையில் இடி விழுந்தது போல் இருக்கிறதாம். இனி ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது என்பதால், திருடனுக்கு தேள் கொட்டியது போல் அவஸ்த்தைப்பட்டு வருகிறாராம் அவர்.

தூது
ஏற்கனவே கையில் ஒரு புது படம் கூட இல்லை. இப்போது இப்படி ஒரு பிரச்சினை வேறு வந்துள்ளதால் ரொம்பவே அப்சட்டில் இருக்கிறாராம் நடிகை. விதியை மதியால் வெல்ல முடியும் எனும் நம்பிக்கையில் தன்னுடன் நடித்த ஹீரோக்களுக்கு இப்போது இருந்தே தூதுவிட்டு வருகிறாராம்.

நடிகையின் எதிர்பார்ப்பு
ஏற்கனவே இந்தப் படத்தால் தனது கால்ஷீட்டை ஏகத்துக்கும் வீணாக்கி விட்டார். இனி புதிய படங்கள் கிடைத்தால் தான் நல்லது என்ற முடிவில் இருக்கிறார் நடிகை. அதோடு தற்போது நடிக்கும் கதாபாத்திரம் தனக்குப் பேர் வாங்கிக் கொடுத்தாலும் புதிய படங்கள் கிடைப்பது சந்தேகம்தான் என்பதால் வருத்தத்தில் இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











