காதலரை வைத்து ஹீரோக்களை கடுப்பேற்றும் இளம் நடிகை
Recommended Video

சென்னை: இளம் நடிகை ஒருவர் படப்பிடிப்பு தளத்திற்கு காதலரை அழைத்து வருகிறாராம்.
சென்னை பொண்ணு அவர். நடிக்க வந்து பல ஆண்டுகள் ஆகியும் இன்னும் வளர்ந்து வரும் நடிகைகள் பட்டியலில் தான் உள்ளார். தமிழ், தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
தற்போது அம்மணி கோலிவுட்டில் ரொம்பவே பிசி.

நடிகை
கோலிவுட்டில் பிசியாக இருந்தாலும் பாலிவுட்டில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். பிற தமிழ் நடிகைகளை போல இவரும் பாலிவுட்டில் ஒரு ரவுண்டு வர ஆசை கொண்டுள்ளார். அந்த ஆசை நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

படங்கள்
நடிகை காதலில் விழுந்துள்ளார். எது செய்தாலும் காதலனிடம் கேட்டுவிட்டுத் தான் செய்கிறாராம். காதலன் சொல்படி தான் ஷூட்டிங்ஸ்பாட்டில் நடக்கிறாராம். ஹீரோக்களிடம் சரியாக முகம் கொடுத்து பேசுவது இல்லையாம். ஹீரோக்களிடம் எட்டியே இருக்குமாறு காதலர் அறிவுரை வழங்கியுள்ளாராம்.

கடுப்பு
நடிகை எதற்கெடுத்தாலும் காதலனுக்கு போன் செய்து அட்வைஸ் கேட்பது, சாட் செய்வது என்று இருப்பதை பார்த்து ஹீரோக்கள் கடுப்பாகிறார்களாம். இதில் அடிக்கடி காதலனை ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வரவழைத்து கடலை போட்டு ஹீரோக்களை மேலும் கடுப்பேற்றுகிறாராம் நடிகை.

திருமணம்
நடிகையின் இந்த காதல் நாங்கள் நல்ல நண்பர்கள் மட்டுமே என்று சொல்லிக் கொள்வதோடு முடியுமா இல்லை திருமணம் வரை செல்லுமா என்பது தெரியவில்லை. காதலனை படப்பிடிப்பு தளத்திற்கு அழைத்து வந்து ஹீரோக்களை கடுப்பேற்றும் நடிகைகள் பட்டியலில் அம்மணியும் சேர்ந்துவிட்டார்.


Click it and Unblock the Notifications











