தமிழ் இயக்குநர்களுக்கு மட்டும் ஓவராக கன்டிஷன் போடும் நடிகை
சென்னை: நடிகை ஒருவர் கதை சொல்ல வரும் தமிழ் இயக்குநர்களுக்கு மட்டும் ஏகப்பட்ட கன்டிஷன் போடுகிறாராம்.
நன்றாக நடிக்கத் தெரிந்த நடிகை அவர். நடிப்பது தவிர்த்து நன்றாக பாடவும் செய்வார். கொடுத்த கதாபாத்திரமாகவே மாறி நடிக்கும் திறன் இருந்தும் அவரால் கோலிவுட்டின் முன்னணி நடிகையாக முடியவில்லை.

பிற திரையுலகை சேர்ந்தவர்களுக்கு என் திறமை தெரிகிறது, அருமை புரிகிறது. ஆனால் கோலிவுட்காரர்கள் தான் என்னை கண்டுகொள்வது இல்லை என்கிறாராம் அம்மணி.
கோலிவுட்காரர்கள் அவரை ஒதுக்கி வைக்க காரணம் உள்ளதாம். தமிழ் இயக்குநர்கள் யாராவது கதை சொல்லப் போனால் சம்பள விஷயத்தில் கறாராக இருக்கிறாராம். மேலும் தான் சொல்லும் இடத்தில் படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்று அடம்பிடிக்கிறாராம்.
மார்க்கெட்டுக்கு தகுந்தது போன்று சம்பளம் கேட்காமல் ஓவராக கேட்பதாக புகார் எழுந்துள்ளது. அவர் போடும் கன்டிஷன்கள் பிடிக்காமல் தான் அவரை யாரும் அணுகுவது இல்லையாம்.


Click it and Unblock the Notifications











