“என் வாழ்க்கையை சீரழித்தது இவர்தான்”.. உள்ளாட்சி தேர்தல் சமயத்தில் குண்டு போட தயாராகும் பாடகி நடிகை!
தன்னை ஏமாற்றியது யார் என விரைவில் அறிவிக்க இருக்கிறாராம் பிரபல நடிகை.
Recommended Video
சென்னை: தன்னை ஏமாற்றி மன அழுத்தத்திற்கு ஆளாக்கியது யார் என வெளிப்படையாகக் கூற இருப்பதாக பிரபல பாடகி நடிகை அறிவித்திருப்பது குறிப்பிட்ட கட்சியினரை கிலியடையச் செய்திருக்கிறதாம்.
நடிப்பில் மட்டுமின்றி இனிமையான குரல் வளத்தாலும் மக்களை மயக்கியவர் இந்த நடிகை. கை நிறைய பட வாய்ப்புகள் கிடைத்தாலும், அதில் தன் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள கதைகளாகத் தேர்வு செய்து நடிப்பதில் வல்லவர் அவர். அதனாலேயே விரல் விட்டு எண்ணும்படியான படங்களில் நடித்திருக்கும் போது, மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளார்.
சில காலம் வெள்ளித்திரையில் இருந்து தள்ளி இருந்த இந்த நடிகை, சமீபத்தில் தன் உள்ளக் குமுறல்களை வார்த்தைகளாகக் கொட்டி படைப்பொன்றை வெளியிட்டார்.

நடிகை தந்த அதிர்ச்சி
அது தொடர்பான விழாவில், தான் வாழ்க்கையில் ஏமாற்றப்பட்டது தொடர்பாகக் கூறி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தார். அதோடு தீவிர மன அழுத்தத்திற்கு ஆளானதாகவும் அப்போது அவர் தெரிவித்திருந்தார். இது அவரது ரசிகர்களை பெரும் அதிர்ச்சி அடைய வைத்தது.

மௌனம்
நடிகையின் இந்த நிலைக்கு காரணமானவர்கள் யார் என்பது குறித்து பல்வேறு யூகங்கள் இணையத்தில் உலா வந்தது. ஆனால், நடிகை வெளிப்படையாக அந்த பெயரைக் குறிப்பிட மறுத்து விட்டார். மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பி வந்தார்.

யார் அந்த கருப்பு ஆடு?
இந்நிலையில் தனது படைப்பை சமூகவலைதளப் பக்கத்தில் மீண்டும் வெளியிட திட்டமிட்டிருக்கிறாராம் நடிகை. அப்போது அந்த நபர் யார் என்பது பற்றி அதில் கூறுவாராம். இதைக் கேட்டு ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தாலும், சம்மந்தப்பட்ட நபர்கள் கிலி அடைந்துள்ளார்களாம்.

உள்ளாட்சித் தேர்தல் சமயம்
காரணம் சம்பந்தப்பட்ட நபர், அரசியல் வட்டாரத்தில் மிகவும் பெரிய இடத்தை சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது. உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள சமயத்தில் இப்படி நடிகையின் அதிரடி அறிவிப்பு அவர்கள் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளதாம். நிச்சயம் நடிகையின் பேச்சு தேர்தல் சமயத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தும் என்கிறார்கள். பார்ப்போம் என்ன நடக்கிறது என.


Click it and Unblock the Notifications











